tamilnadu

img

பள்ளி மதிய உணவு திட்டத்தில்  ரூ.364 கோடி மோசடி

பள்ளி மதிய உணவு திட்டத்தில்  ரூ.364 கோடி மோசடி

பாஜக கூட்டணி ஆளும் ம காராஷ்டிராவில் தினமும் ஊழல், முறைகேடு, மோசடி தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரா தலை நகர் மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில்  மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தில் ரூ.364 கோடி ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சட்ட மேலவையில் குற்றம்சாட்டின. சுமார் 20 நிறுவனங்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஒப்பந்தங்களைப் பெற்று அரசாங்கத்தை ஏமாற்றியுள்ளன. இந்த மெகா ஊழல் சம்பவத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திள்ளன. ஆனால் பாஜக கூட்டணி அரசு இது தொடர்பாக எவ்வித விளக்கம் அளிக்க வில்லை.