சிலிண்டர் தட்டுப்பாட்டால் தொழிலை நடத்த முடியவில்லை மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம்
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் கொடூர யுத்தம், அதனால், மேற்காசிய பிராந்தியத்தில் ஏற் பட்டுள்ள போர்பதற்றம் காரண மாக, கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 5 முதல் 6 நாட்க ளுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ள அதேநேரத்தில், நாடு முழுவ தும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. குறிப்பாக, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநி யோகம் முற்றிலும் தடைபட்டுள் ளது. இதனால் ஹோட்டல் தொ ழில் முடங்கும் உருவாகியுள்ளது. உணவகங்கள் கடும் பாதிப்பு மதுரை மாவட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட உணவகங் கள் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவ கக் கடைகள் சுமார் 10,000 உணவ கங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. இந் நிலையில், வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மதுரை மகபூப்பாளையத்தில் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக் குமார் கூறுகையில், “சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப் படும். எங்களிடம் வேலை பார்க் கும் தொழிலாளர்களுக்கு சம்ப ளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500 ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் 5 நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரி வித்தார். மதுரையில், சமையல் எரி வாயு விநியோகத்தில் பணியாற் றும் தனியார் நிறுவன பணியா ளர் இளங்கோவன் கூறுகையில், “சமீப நாட்களாக வணிக பயன் பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள் ளதாக கூறப்படுகிறது. தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண் டர்களுக்கு முன்னுரிமை வழங்கப் பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவை யான அளவு சிலிண்டர்கள் கிடைக் காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என்கிறார். கருப்புச் சந்தையில் சிலிண்டர் விற்பனை? வணிக சிலிண்டர்களை விநி யோகிக்க வேண்டாம் என டீலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்ப தாக கூறப்படும் நிலையில், சந்தையில் கிடைக்காத சிலிண்டர் கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுவதாகவும் வணி கர்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் ‘பாரத் கேஸ்’ சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத் தும் சிலிண்டர்கள். முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப் படும். ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது. அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும் இதேநிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும். வணிக ரீதியான சிலிண்டரை ஆர்டர் போட்டவுடன் நாங்களே நேரடியாக கொண்டு போய் வழங்குவோம். இப்பொழுது சென்னையில் உள்ள மையத்தி ற்கு தகவல் கொடுக்க வேண்டி யுள்ளது. அவர்கள், மருத்துவ மனை மற்றும் தங்கும் விடுதிக ளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லியுள்ளனர். இவர்கள் புக்கிங் செய்து, அவர்கள் எங்களு டைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள். அந்த அடிப்ப டையில் தான் வணிகரீதி யான சிலிண்டர்கள் வழங்கப்படு கின்றன. அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது” என்றார். உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம் வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந் ்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இரு மடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்ற னர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிக ரிக்கும் அபாயம் உள்ளது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு மதுரையில் பல ஆயிரம் மாண வர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவ கங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப் பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப் படும் அபாயம் உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர். பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமை யாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப் பாக, சிறு மற்றும் நடுத்தர வணி கங்கள் மிகப்பெரிய பொருளா தார இழப்பை சந்திக்கும் அபா யம் இருப்பதாக அவர்கள் கூறு கின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாக லாம் என எச்சரிக்கப்படுகிறது. போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெ ரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற் கொண்டு அமைதியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப் படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஜெ.பொன்மாறன்
மதுரை காபி, டீ வர்த்த சங்க துணைச்செயலாளர் எம்.கே செல்வகுமார் அளித்த பேட்டியில், “உணவுப் பொருட்களில் அடிப்படையானது டீ, காபி தான். ஏனெனில் பொதுமக்கள் காலை எழுந்தவுடன் டீ, காபி கடைகளைத் தான் தேடுவார்கள். குறிப்பாக மதுரையில் எல்லா தெருக்களிலும் டீ, காபி கடைகள் தான் அதிகமாக இருக்கும். அவர்களின் அன்றாட வேலை யே டீ, காபி கடைகளில் இருந்து தான் துவங்கும். இந்தச் சூழ்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு டீக்கடை உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வணிக சிலிண்டர் 1980 ரூபாய்க்கு கிடைத்தது, தற்போது 2200 ரூபாய் என்கிறார். ஆனால், கூடுதல் விலை கொடுத்தும் சிலிண்டர் கிடைப்பதாக இல்லை. எனவே, இதனை ஒன்றிய - மாநில அரசுகள் உடனடியாக சரி செய்து வணிகர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் இதனைச் சரி செய்யவில்லை என்றால் மிகப்பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார். -பா.ரணதிவே
