tamilnadu

img

சுவாமிநாதனை பதவி நீக்கக்கோரி தீர்மானம்!

சுவாமிநாதனை பதவி நீக்கக்கோரி தீர்மானம்!

புதுதில்லி, டிச. 9 - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான (Im peachment Motion) தீர்மானத்தை, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையெழுத் திட்ட முறைப்படியான அறிவிக்கையை, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா விடம், பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், டி.ஆர். பாலு, கனிமொழி, சு.வெங்கடேசன், தொல். திருமாவள வன், துரை வைகோ, ஆ. ராசா, ஜோதி மணி உள்ளிட்ட ‘இந்தியா கூட்டணி’ தலை வர்கள் செவ்வாயன்று நேரில் அளித்தனர். அந்த அறிவிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 217-ஆவது பிரிவு மற்றும் 124-ஆவது பிரிவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனைப் பதவி நீக்கம் செய்வதற் கான தீர்மானத்தை அளிப்பதாக கூறி யிருக்கும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், தீர்மானத்தில் 3 விஷயங் களைச் சுட்டிக்காட்டியுள்ளனர். 1. “நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடத்தையானது, நடுநிலைமை, வெளிப் படைத்தன்மை, நீதித்துறையின் மதச்சார்பற்ற செயல்பாடு குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.  2. எம். ஸ்ரீசரண் ரங்கநாதன் என்ற மூத்த வழக்கறிஞர் ஒருவருக்கு வழக்கு கள் மீதான தீர்ப்பில் அநாவசியமான சலுகை காட்டுகிறார். மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வழக்கறி ஞர்களுக்குச் சலுகை காட்டுகிறார். 3. வழக்குகள் மீது ஒரு குறிப் பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படை யில் தீர்ப்பளிக்கிறார். இந்திய அரசி யலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கை களுக்கு எதிராகச் செயல்படுகிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, “சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர் களின் மீது எழுந்துள்ள நடத்தை மீறல் (misconduct) குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறை வேற்ற இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது. இதுதொடர்பாக, இந்தியக் குடி யரசுத் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு மக்க ளவை மற்றும் மாநிலங்களவை உறுப்பி னர்கள் எழுதிய கடிதங்களின் பிரதிகள் மற்றும் அவற்றின் இணைப்புகளும் இந்த அறிவிக்கையுடன் இணைக்கப் பட்டுள்ளன” என்றும் தெரிவித்துள்ளனர். இந்தியா கூட்டணி அளித்துள்ள இந்த  பதவி நீக்கத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால், மக்கள வையில் எம்.பி.க்கள் அல்லது மாநி லங்களவையில் 50 எம்.பி.க்களின் கையெழுத்திட வேண்டும். தற்போது, மக்களவையிலேயே சிபிஎம் உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், என்சிபி உறுப்பினர் சுப்ரியா சுலே உட்பட 107 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு பதவி நீக்கத் தீர்மா னத்திற்கான நோட்டீஸ் அளிக்கப் பட்டுள்ளது.  இதனை மக்களவைத் தலைவர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், ஜி.ஆர். சுவாமிநாதன் மீதான குற்றச்சாட்டு களை விசாரிக்க, உச்சநீதிமன்றத் தின் மூத்த நீதிபதி, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் புகழ்பெற்ற சட்ட வல்லுநர் ஆகியோரை உள்ள டக்கிய மூன்று பேர் குழு அமைக்கப் படும். இந்தக் குழு விசாரணை நடத்தி நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும்.  அதனடிப்படையில், பதவி நீக்கத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். தீர்மானம் நிறைவேற, மூன்றில் 2 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும்.  அவ்வாறு வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றிபெற்றால், அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் மூலம் பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீர்மானம் வெற்றி பெறுமா, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? என்ற கேள்விகள் இருந்தாலும், நீதிபதிகளின் மதச்சார்பு நடவடிக்கைகளை கேள்வி  எழுப்புவதற்கான வாய்ப்பாக நாடாளு மன்ற விவாதம் இருக்கும். எதிர்க் காலத்தில் நீதிபதிகளின் ஒருசார்பு நட வடிக்கைக்கு எச்சரிக்கை விடுப்பதாக வும் அது இருக்கும்.