கோவிட் அச்சத்துடனும் ஊரடங்கிலும் முடங்கி- பட்டினியின் விளிம்பில் நின்ற வர்களுக்கு தோழர்கள் உணவ ளிப்பதை பார்த்து சில நல்ல உள்ளங்கள் தானாக முன்வந்து உதவி னார்கள். கை கொடுத்து உற்சாக மூட்டினார்கள். சக மனிதனின் பசியை உணர்ந்து தனது மனிதத்தை வெளிப டுத்துகிறார்கள். ஒரு முதியவர்க்கு தினமும் வீடு தேடி உணவை கொடு ப்பதை பார்த்த அந்த முதியவரின் பக்கத்து விட்டு பெண்மணி ஒருவர் தானாக முன் வந்து 5 கிலோ அரி சியை வழங்கி “நான் சாப்பாடு குடுத்தால் இவர் ஒருவருக்குதான் கொடுத்திருப்பேன். இந்த அரிசியை உங்களிடம் குடுத்தால் இன்னும் கூடு தலா பத்து பேர்க்கு குடுப்பீங்க” என கூறி தனது மனித நேயத்தை வெளிப்படுத்தினார்.
ஒரு காவல்துறை காவலர் பத்து கிலோ அரிசியை கொடுத்து புன்முறுவ லோடு தனது மனித மாண்பை காட்டி னார். அரசு பெண் அதிகாரி ஒருவர் தனது சம்பள பணத்தில் இருந்து சிறுதொகையை கொடுத்து தனது அதி காரத்தையும் விட பெரியது பசிக்கு உணவளிப்பது என தனது மனித நேயத்தை வெளிக்காட்டினார். இப்படி இன்னும் ஏராளம். இப்படி பல்வேறு தரப்பு மக்களின் பிறருக்கு உதவும் உணர்வுகளை தட்டி எழுப்பியதில் கோவிட் நல்ல சில படிப்பினைகள் அளித்துள்ளதாக குறிப்பிட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் கே. ஜி.பாஸ்கரன். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ரூ.32 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ப்பட்டுள்ளது என்றார் அவர். கேரளா மாநிலம் ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், பாலக்காடு மாவ ட்டங்களைச் சார்ந்த 11 பயிற்சி செவிலி யர்கள் கடந்த 40 நாட்களாக திரு நெல்வேலியில் ஊரடங்கு காரணமாக சிக்கித் தவித்தனர்.
அவர்களுக்கு தேவையான உதவிகளை பாளை யங்கோட்டை வாலிபர் சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் செய்து கொடுத்தனர். அவர்கள் சொந்த மாநிலம் செல்ல பெரு முயற்சிகள் பலவும் எடுக்கப்பட்டது. கேரள அரசின் அனுமதி பெற்ற பின், நெல்லை மாவட்ட ஆட்சித் தலை வரின் மூலமாக தமிழக அரசின் அனு மதி பெறப்பட்டது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், நெல்லை மாவட்டச் செய லாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆகியோர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெற்றுத் தந்தனர். பயிற்சி செவிலியர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்து நன்றி தெரிவித்து விட்டு, கேரள மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
தொகுப்பு: சி.முருகேசன்