வாசிப்பு விழிப்புணர்வு நடை...
49 ஆவது சென்னை புத்தகக் காட்சி ஜன.8-21 வரை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி சனிக்கிழமையன்று (ஜன.3) நந்தனம் சிக்னல் முதல் ஒய்எம்சிஏ வளாகம் வரை மாணவர்கள் பங்கேற்ற ‘வாசிப்பு விழிப்புணர்வு நடை’ நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
