கியூபாவுக்கு மிரட்டல் விடுத்த அமெரிக்காவுக்கு கியூப ஜனாதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுமார் 60 ஆண்டுகாலமாக அமெரிக்கா விதித்துள்ள கொடூரமான பொருளாதாரத் தடைகளே எங்கள் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம். கியூபாவில் நிலவும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறைக்கு காரணம் கியூபா தான் என விமர்சிப்பவர்கள் வெட்கப்பட வேண்டும் என டிரம்புக்கு கியூப ஜனாதிபதி மிகுவெல் டயஸ்-கனெல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கியூபாவிற்கு இனி வெனிசுலாவிலிருந்து எண்ணெய்யோ அல்லது பணமோ கிடைக்காது. கியூபா உடனடியாக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் கியூப ஜனாதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
