tamilnadu

img

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை! - இளைஞர் கைது

ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனியராஜ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
ராமேஸ்வரம் நகராட்சி சேராங்கோட்டை பகுதியில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து, அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து தப்பி ஓடிய முனியராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.