tamilnadu

img

குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது!

திண்டுக்கல், செப்.20 - வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பது ரிசர்வ் வங்கி விதிகளுக்கு விரோதமானது என்று திண்டுக்கல் வங்கியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., பேசினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வியாழனன்று வங்கியா ளர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி  தலைமை வகித்தார்.  இக்கூட்டத்தில் முன்னிலை வகித்து  ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., பேசிய தாவது: குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) ரூ.1000 இல்லாத  வாடிக்கையாளர்களுக்கு அபராதம்  விதிப்பது ரிசர்வ் வங்கி வழிகாட்டுத லுக்கு விரோதமானது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாக வங்கி நிர்வாகத்திலிருந்து தொடர்பு கொண்டு மினிமம் பேலன்ஸ் முறையை  தொடர்ந்து தக்க வைக்க ஆலோசனை வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அவகாசம் கொடுக்க வேண்டும். அதற்கு  பதிலாக அபராதம் விதிக்கக் கூடாது. சிறு தொழில், குடிசைத் தொழில் செய் வோருக்கு நிபந்தனையில்லாத வங்கிக்  கடனாக ரூ.2 லட்சம் வரை கடன் தர  வேண்டும். 

இதே போல் விவசாயிகளுக்கு ரூ.3  லட்சம், கல்விக்கடன் ரூ.4 லட்சம் வரை  எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் நிபந்தனையின்றி வழங்க வேண்டும். கடன் வழங்குவதில் வங்கிகள் 20 விழுக் காடு இலக்கை அடைந்ததாக அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத் தின் போது யார் யாருக்கு கடன் வழங்கப் பட்டிருக்கிறது என்ற விவரத்துடன் வந் தால், அது பற்றி ஆலோசனை செய்ய  ஏதுவாக இருக்கும்.  மேலும் சாதாரண ஏழை-எளிய மக்களுக்கு, விவசாயிகளுக்கு கடன் கிடைக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். மலை கிராமப்  பகுதிகளில் வங்கிகளை திறந்து அந்த  மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அந்த மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வங்கி சேவை யாற்ற முன்வர வேண்டும். நத்தம் வட்டத்தில் பெரிய அரவங் குறிச்சி, கொடைக்கானல் வட்டத்தில் பூண்டி, கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் தாண்டிக்குடி ஆகிய ஊர்களில் வங்கிக் கிளைகளை துவக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். பழங்குடி மக்களான பளியர். காட்டு நாயக்கன் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் வங்கி ஏ.டி.எம்.களை அமைக்க வேண்டும். அந்த மக்க ளுக்கு கடன் கிடைக்க முகாம்களை நடத்துவதற்கு வங்கி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

இது தொடர்பாக திண்டுக்கல் ஆட்சி யர் பூங்கொடி பேசுகையில், “திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு-குறு  தொழில் முனைவோர்கள் கிராமப்புறங் களில் அதிகளவில் தொழில் செய்து வருகின்றனர். தங்கள் தொழிலை மேம் படுத்தும் வகையில், வங்கிகள் சார்பில் கடனுதவிகள் வழங்கிட வேண் டும். சிறு-குறு தொழில் முனைவோர் தனி யார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில், தொழில் மேம் பாட்டுக்குத் தேவையான கூடுதல் நிதி ஆதாரங்களை வங்கிகள் சார்பில் வழங்கி, தொழில் வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்க வேண்டும் என்று  கோருகிறார்கள்.  மாவட்டத்தில் அதிகமானோர் விவ சாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் களுக்கு காலதாமதமின்றி விரைந்து கட னுதவிகளை வழங்கிட வேண்டும். மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்க ளுக்கு வங்கி சேவையை விரிவுபடுத்தி டும் வகையில், வங்கி விதிகளில் விலக்கு அளித்து மலைக்கிராமங்களில் வங்கி கிளைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயக் கடன், கல்விக்கடன் உள்ளிட்ட சேவைகளில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள கடன் இலக்கை எட்டும் வகையில், விரைந்து கடனுதவிகள் வழங்கிட வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளி கள் தங்கள் விருப்பப்படி வீடுகள் கட்டிக் கொள்வதற்கு, கூடுதல் நிதி  தேவைப்படுவோருக்கு கடனுதவி களை வங்கிகள் விரைந்து வழங்க வேண்டும்.

மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பரிந்துரை செய்யப் படும் தொழில் கடனுதவி விண்ணப்பங் களை உடனுக்குடன் பரிசீலித்து தொழில்  கடனுதவிகளை வழங்க வேண்டும். கடனுதவி கோரி பெறப்படும் விண் ணப்பங்களை உடனுக்குடன் பரி சீலித்து, எவ்வித காலதாமதமும் இன்றி  கடனுதவிகள் வழங்கி திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட அனைத்து அலுவ லர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்” என்றார்.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஷ்குமார்,  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜி. அருணாச்சலம், மாவட்ட தொழில் மைய  பொது மேலாளர் பூ.சு.கமலக் கண்ணன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மாவட்ட மேலாளர் ஏ.ஆர்.முகைதீன் அப்துல்காதர், பல்வேறு  வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (நநி)