மதுரை, ஜூன் 10- கொரோனா பெருந்தொற்றை எதிர் கொள்ள உடலின் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்க “மஹா கபவாத சூப்” மற்றும் “மஹா கபவாத” மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்புத னன்று மாவட்டத் தலைவர் ஜெ.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாநில பொதுச் செயலா ளர் ஆ.செல்வம் துவக்கி வைத்து பொதுப் பணித்துறை அலுவலகத்தில் உள்ள ஊழி யர்களுக்கு மருந்துகளை வழங்கினார். மருந்துகளுக்கு ஏற்பாடு செய்த பொதுப் பணித்துறை பொறியாளர் காஜா முகமது வாழ்த்தி பேசினார். இதில் மாவட்டச் செய லாளர் க. நீதிராஜா, பொருளாளர் ராம்தாஸ், தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டணி சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சீனி வாசன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க. நீதிராஜா கூறுகையில், அரசு ஊழியர்கள் பல்வேறு அரசுப் பணிகளை இந்த ஊரடங்கு காலத் தில் மேற்கொண்டு வருகிறார்கள். அவர் களை பாதுகாக்கும் வகையில் அரசு பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டா லும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மதுரையில் உள்ள அரசு அலுவல கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்”மஹா கபவாத சூப்” மற்றும் “மஹா கபவாத” மாத்திரைகளை நேரடி யாகச் சென்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வழங்க உள்ளோம் என்றார்.