tamilnadu

கொரோனா எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கல்

மதுரை மே 28- திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கொரானா எதிர்ப்பு சக்தி ஹோமியோ மருந்து 3,000 பேருக்கு வழங்கப்பட்டது. மதுரை ஹோமியோ மருத்துவர் டி.செங்குட்டுவன் தலைமை யில் மருத்துவக்குழுவினர் மருந்து வழங்கினர். முகக்கவசமும் வழங்கப் பட்டது. நிகழ்வில் மாவட்டவ் செயற்குழு உறுப்பினர் டி.ஏ.இளங்கோவன், தாலுகா செயலாளர் வி.முத்துராஜ், மாவட்டக் குழு உறுப்பினர், என்.விஜயா, பி.ஈஸ்வரி, பாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.