tamilnadu

img

ஆர்சானிக் ஆல்பம்-30 ஹோமியோபதி மருந்து வழங்கல்

மதுராந்தகம் அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர்களுக்கு, ஆர்சானிக் ஆல்பம்-30 ஹோமியோபதி நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், பணிமனை கிளை மேலாளர் சச்சுதானந்தம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் நந்தன், செயலாளர் புருஷோத்தமன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் பிரமிளா, போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி கோவலன் உள்ளிட்டோர் மருந்துகளை வழங்கினர்.