முகாம்களிலிருந்து வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் பரபரப்பு
திருவள்ளூர், டிச.6- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தேவம்மா நகர் பகுதியில் டிட்வா புயல் எதிரொலியாக கன மழை பெய்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் அருகில் உள்ள குளம் நிரம்பி தண்ணீர் வெளியேற வழி இன்றி வீடுகளை சூழ்ந்து குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் அவர்களை பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக தங்க வைத்து வந்தனர். ஆனால் தற்போது தண்ணீர் குறையாத நிலையில் நிவாரண முகாம்க ளில் இருந்து உடனடியாக காலி செய்து, நீங்கள் வீடு களுக்கு செல்ல வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துளனர். இந்த நிலையில் வீடுகளில் தண்ணீர் வடியாத நிலை யில் நாங்கள் எங்கே செல்வோம் எனக் கூறி அப்பகுதி மக்கள் பொன்னேரி -திருவொற்றி யூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தண்ணீர் குறையும் வரை நிவாரண முகாம்களில் தங்க வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
