காரைக்குடி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, ஜன.21 – சிவகங்கை மாவட்ட காரைக்குடி மண்டல அலு வலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற் றும் வாயிற்கூட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு, ஏடிசி, ஐஎஸ்டி, ஏஐடி யுசி, டிடிஎஸ்எப், ரேவா கூட்ட மைப்பு போன்ற சங்கங்கள் பங்கேற்றன. மோட்டார் வாகன சட்டம் 288ஐ திருத்த வேண்டாம். தனியார் பேருந்துகளை நிரந்தரமாக குத்தகைக்கு எடுக்கும் முயற்சியை நிறு த்த வேண்டும். மின்சார பேரு ந்துகளை அரசே இயக்க வேண்டும்; கழக பணிமனை களை தனியாருக்கு ஒப்ப டைக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி, மண்டல அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
