tamilnadu

img

வக்பு திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வக்பு திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஏப்.24- 
ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், புதன் கிழமை பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தத்தில் கட்சியின் வட்டச் செயலாளர் கே.எம். சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதில், வட்டக் குழு உறுப்பினர்கள் டி. அறிவழகன் ஏ. முருகேசன், டி. சீனிவாசன், பி. செல்வராஜ், கிளைச் செயலாளர்கள் ஏ. செல்வராஜ், டி. அர்ச்சுணன், ஏ. கருப்பையா, பி. பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.கே. ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைச் செயலாளர் எழுத்தாளர் இரா. எட்வின், மாவட்டச் செயலாளர் ஜேசுதாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் இலியாஸ், தமுமுக நகர தலைவர் எஸ். பர்கத்அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் இ.கமால்பாஷா ஆகியோர் உரையாற்றினர். 
பாபநாசம் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சாலியமங்கலம் அருகே கோவிலூரில் அரசியல் அமைப்பு சாசனத்திற்கு விரோதமான வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
செல்வம், சாகுல் அமீது, முகமது சாலிக் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு மனோகரன், மாவட்டக் குழு பக்கிரி சாமி, நம்பிராஜன், ஒன்றியச் செயலாளர் ரவி, மஸ்ஜித் நூர் ஜமாத்தார்கள், மஸ்ஜித் சலாம் ஜமாத்தார்கள், ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.