tamilnadu

img

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை பட்டா கோரி குடியேறும் போராட்டம்

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை பட்டா கோரி குடியேறும் போராட்டம்

மதுரை, டிச.1— மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி, அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. செப்டம்பர் 30-ஆம் தேதி சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுக்களை உசிலம்பட்டி தாசில்தார் பரிசீலனை செய்து வருவதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, செல்லம்பட்டி ஒன்றியத்தின் கருமாத்தூர், கோவிலாங்குளம், புள்ளநெரி உள்ளிட்ட பகுதிகளில் தகுதியானவர்களுக்கு பட்டா  வழங்க வேண்டும் எனக் கோரி, சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெ.காசி தலைமையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன், ஒன்றிய தலைவர் வி.ஆர்.முத்துபேயாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பி.முருகன், உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் பெ.ராமர், செல்லம்பட்டி ஒன்றியச் செய லாளர் ஏ.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், விவசாய தொழி லாளர் சங்க நிர்வாகிகள் ஜெயமணி, சிங்க ராஜ், டி.காசிமாயன், ஏ.ஆர்.ரவி ஆகியோ ரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். போராட்டக்காரர்களுடன் உசிலம்பட்டி வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி னார். பேச்சுவார்த்தையில், இதுவரை வழங்கப்பட்ட 248 மனுக்களுடன், இன்றைய போராட்டத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 61 மனுக்களையும் சேர்த்து மொத்தம் 309 மனுக்களை விரைவில் பரிசீலித்து, தகு தியானவர்களுக்கு முன்னுரிமை அடிப்ப டையில் டிசம்பர் மாத இறுதிக்குள் பட்டா  வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.