பேராசிரியர் பிரம்மா செல்லானி
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமம், அமெரிக்காவால் கைப்பற்ற திட்டமிடப்படும் வெனிசுலாவின் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் முதல் வெளிநாட்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் விரைவில் வெளியாகும்.
சமூக ஆர்வலர் சந்தீப் சிங்
வடமாநிலத்தில் கண்ணில் காயத்தோடு இருக்கும் 12 வயது சிறுவனிடம் செய்தியாளர் ஒருவர் மோடி பற்றி கேட்கிறார். அதற்கு சிறுவன்,”சிகிச்சையே கிடைக்காதபோது எதற்காக மோடி? யார் இந்த மோடி?” என காட்டமாக பேசுகிறான். இறுதியில் அவன் அழுகிறான். வடமாநிலங்களில் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு எதிர்ப்பு கடுமையாக உள்ளது. அதற்கு சாட்சி தான் இது.
இயக்குநர் சந்தீப் ரெட்டி
திரைப்படத் தணிக்கை வாரியம், சினிமா நுணுக்கங்களே தெரியாத நபர்களால் இயக்கப்படக்கூடாது. அனுபவம் வாய்ந்த சீனியர் இயக்குநர்கள், ஓய்வு பெற்ற இயக்குநர்கள் மற்றும் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களே தணிக்கை வாரியத்தை நிர்வகிக்க வேண்டும்.
நோபல் கமிட்டி
நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு வழங்க விரும்புவதாக மரியா கொரினா மச்சாடோ (வெனிசுலா நாட்டவர் - நோபல் பரிசை வென்றவர்) தெரிவித்துள்ளார். ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை.
