tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

நாளை பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர், அக்.22 - தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில்  பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம்” பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில் நடைபெற்று வருகிறது.  தற்போது அக்டோபர்-2025 மாதத்திற்கான  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 வெள்ளிக்கிழமை  பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தபட உள்ளது.     இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து  கொள்ளும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள்  தவறாது தங்களது கல்வித்தகுதி மற்றும் சுய விவரங்களை  https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.   வேலையளிப்பவர்கள்  தங்களது நிறுவன விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்ப மும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்  துறை நிறுவனங்களும் 24.10.2025 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறு மாறு மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்து உள்ளார். போதை பொருட்கள் விற்பனை: செயலியில் தகவல் தெரிவிக்கலாம் பெரம்பலூர், அக்.22 -  பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக ஏற்படும் தீமைகள் குறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  போதைபொருட்கள் விற்கும் நபர்கள் குறித்த தக வலை தருவதற்கு Drug Free Tamil Nadu என்ற  மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் Drug Free Tamil Nadu என்ற App-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களது பகுதி களில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை  பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால்  மேற்படி செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்தவரின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப் படும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு போதை பொருட்கள் இல்லாத பெரம்பலூர் மாவட்டத்தை உரு வாக்க முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட  ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். செம்பை மணவாளன் நினைவு  சிறுகதைப் போட்டி அறிவிப்பு புதுக்கோட்டை, அக்.22 - எழுத்தாளர் செம்பை மணவாளன் நினைவு அறக் கட்டளை மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம் ஆகியவற்றின் சார்பில் சிறுகதைப் போட்டி அறி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருமன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சி. பாலச்சந்திரன் வெளியிட்ட அறி விப்பில், “எழுத்தாளர் செம்பை மணவாளனின் முதலாம்  ஆண்டு நினைவு நாளையொட்டி, செம்பை மணவாளன் நினைவு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் சிறுகதைப் போட்டி  நடத்தப்படுகிறது. எந்த அச்சு மற்றும் இணைய இதழ்களிலும் வெளிவந்தி ராத, 1500 முதல் 2 ஆயிரம் சொற்களைக் கொண்ட சிறு கதைகளை படைப்பாளர்கள் அனுப்பி வைக்கலாம். பெயர், கைப்பேசி உள்ளிட்ட விவரங்களைத் தனித்தா ளில் சேர்த்து, அனுப்பி வைக்க வேண்டிய முகவரி- சி.  பாலச்சந்திரன், 1109, வஉசி நகர், மச்சுவாடி, புதுக்கோட்டை-  622004. அனுப்ப வேண்டிய கடைசி தேதி- டிச.15. முடிவு கள் வெளியிடப்படும் தேதி- ஜன.18. முடிவு வெளியாகும் வரை அச்சு மற்றும் இணைய இதழ்களுக்கு சிறுகதையைப் பகிரக் கூடாது. முதல் பரிசு  ரூ. 5 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 4 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.  3 ஆயிரம். ஊக்கப் பரிசாக 3 பேருக்கு தலா ரூபாய் ஆயி ரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு- 98659 85773  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப் பட்டுள்ளது. நீலகண்டப் பிள்ளையார் கோவிலுக்கு  நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் தஞ்சாவூர், அக்.22 –  பேராவூரணி, நீலகண்டப் பிள்ளையார் கோவிலுக்கு, நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பிரசித்தி பெற்ற  நீலகண்டப் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவி லில், வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அதிகாலை 3 மணிக்கு குண்டு வெடிக்கும் என செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 1:30 மணிக்கு, மர்ம நபர் காவல்துறை  கட்டுப்பாட்டு அறைக்கு போனில் கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.  இதையடுத்து, காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவில் கோவில் முழுவதும், சோதனை யிட்டதில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.  தொடர்ந்து, காவல்துறையினர் கட்டுப்பாட்டு அறைக்கு  வந்த மொபைல் எண்ணை ஆய்வு செய்ததில், வெடி குண்டு மிரட்டல் விடுத்தவர், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு (37)  என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீல கண்டப் பிள்ளையார் கோவில் தேரோட்டத் திருவிழாவின்  போது, தெப்பக்குளம் பகுதியில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்த நபர் என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கோவில் திருப்பணியின்  போது, ஸ்தபதிகளுடன் உதவியாளராக வந்து பணிபுரிந்த வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேராவூரணி காவல்துறையினர் வழக்குப்  பதிந்து, சிங்காரவேலுவை தேடி வருகின்றனர்.