tamilnadu

img

ஆவடி காவல் ஆணையராக  பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு

ஆவடி காவல் ஆணையராக  பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு

அம்பத்தூர், ஜன. 1- ஆவடி காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். ஆவடி காவல் ஆணையராகப் பணியாற்றிய கி.சங்கர்  தமிழ்நாடு சிறைத்துறையின் கூடுதல் காவல்துறை இயக்குநராக (ஏடிஜிபி) நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தென் மண்டல காவல்துறைத் தலைவராக (ஐஜி) பணியாற்றிய பிரேம் ஆனந்த் சின்ஹா கூடுதல் காவல்துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று (ஏடிஜிபி), ஆவடி காவல் ஆணையராக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.