tamilnadu

img

போப் பிரான்சிஸ் உடல் அடக்கம்!

போப் பிரான்சிஸ் உடல் அடக்கம்!

எளிமையான முறையில் நடந்த இறுதி நிகழ்ச்சிகள்

ரோம், ஏப்.26- மறைந்த போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படி வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசி லிக்கா ஆலயத்தில் ஏப்ரல் 26 அன்று அடக்கம் செய்யப்பட்டது. தனது கல்லறையும் இறுதிச்சடங் கும் ஆடம்பரம் இல்லாமல் இருக்க  வேண்டும் என 2023-ஆம் ஆண்டே போப்  அவரது உயிலில் குறிப்பிட்டதற்கு இணங்க, போப் பிரான்சிஸின் இறுதி நிகழ்ச்சிகள் மிக எளிமையான முறை யில் நடந்தேறின. குறிப்பாக, மூன்று  அடுக்கான சவப்பெட்டிக்குப் பதில்,  ஒரே ஒரு மரத்தாலான சவப்பெட்டி யைப் பயன்படுத்தி, முதல் முறையாக வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்  யப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, போப்பாக இருந்த ஒருவரது உடல்,  முதன்முறையாக வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக போப் பிரான்சின் உட லுக்கு, உலகத் தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கடந்த 3 நாட்களாக உலகம் முழுவதும் இருந்து  லட்சக்கணக்கான மக்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். உலக நாடுகளின் தலை வர்களும் நேரில் போப் உடலுக்கு அஞ்  சலி செலுத்தினர். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்  நாசர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி  எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் உள்  ளிட்டோர் போப் உடலுக்கு நேரில் அஞ்  சலி செலுத்தினர். இந்திய அரசு சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, போப் பிரான்சிஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இறுதி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.