பொள்ளாச்சி பாலியல் வழக்கு மே 13 இல் தீர்ப்பு
கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு
கோயம்புத்தூர், ஏப்.28 - பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மே 13 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பொள் ளாச்சியில் பல பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்ப லின் கொடூரத்தனம் அம்பலமானது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் கெஞ்சுகிற வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்க ளில் வெளியாகி சமூகத்தை பதற வைத்தது. இச்சம்பவத்தை அன்றைய அதிமுக ஆட்சியாளர்கள் மூடிமறைக்க முயற்சித்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் பெரும் போராட் டத்தை நடத்தி, இக்கொடூர சம்பவத்தை வெளிக்கொணர்ந் தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக் கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண் ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதி மன்றத்தில் சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், கோவை நீதிமன்றத் தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப் பட்டு வந்தது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூடப்பட்ட நீதி மன்ற அறைகளில் விசாரணையில் பங்கெடுத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்ப தற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 5 அன்று ஆஜர்படுத்தப்பட்ட னர். வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி யங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரிடமும் சுமார் 50 கேள்வி கள் வரை கேட்கப்பட்டதாக கூறப்படு கிறது. சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு விரை வில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட் டது. இந்நிலையில், வருகின்ற மே 13 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.