மழை வெள்ள சேதத்திற்கு இழப்பீடு வழங்க கோரி மனு
மன்னார்குடி, அக்.22 - தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், சம்பா நடவு பயிர்கள், நேரடி விதைத் தெளிப்பு பயிர்கள், சேதமடைந்த கூரை-ஓட்டு வீடுகள், உயிரிழந்த கால்நடைகள் குறித்து உரிய ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாட்சியரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் டி.ஜான் கென்னடி தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ராதா, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.அண்ணாதுரை, விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றியத் தலைவர் டி.முருகேசன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.ராஜா, பருத்தி கோட்டை கிளைச் செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
