நெல் மூட்டைகளுக்கு நிரந்தர கிடங்கு வசதி செய்ய வேண்டும்
திருவாரூர், அக். 11- மேட்டூரில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குறுவை சாகுபடி நல்ல முறையில் நடந்துள்ள நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பல இடங்களில் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வடகிழக்கு பருவமழையில் நெல் நனைந்து முளைக்காமல் பாதுகாக்க நிரந்தர கிடங்கு வசதிகளை உருவாக்க வேண்டும் எனவும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் நடந்த நிகழ்ச்சி யில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையில் நெல் நனைந்து முளைத் தால் அரசுக்கும் விவசாயிக்கும் நஷ்டமும் மன வேதனையும் ஏற்படும். எனவே புதிய தற்காலிக கிடங்குகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். உரத் தட்டுப்பாடு குறித்து முதல மைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியும் தமிழகத்தின் தேவைக்கான உரம் வந்து சேர வில்லை. தண்ணீர், விதை, ஆட்கள் இருந்தும் உரமின்மை காரணமாக உற் பத்தி இழப்பு ஏற்படும். ஒன்றிய அரசு தேவை யான உரத்தை உடனடியாக வழங்க வேண்டும்” என்றார். நடிகர் விஜய் விவகாரம் குறித்து கடும் விமர்சனம் தெரிவித்த அவர், “அரசுக்கு நிபந்தனை விதிப்பது தவறு என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க இவ்வளவு பாதுகாப்பு தேவையா என்றும் கேள்வி எழுப்பி னார். கரூர் சம்பவத்தை அரசியல் ஆக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என்றார். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைக்கு தனி பாலஸ்தீன நாடு உருவாவதே நிரந்தர தீர்வு என்றும், டிரம்பின் நோபல் பரிசு கோரிக்கை குழந்தைத்தனமானது என்றும் அவர் தெரிவித்தார்