tamilnadu

img

எக்ஸ்இ வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உருமாறிய எக்ஸ்இ வகை கொரோனா தொற்று குறித்து கவலைப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.    

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து ரூ.20 லட்சம் மதிப்பில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிதாக உருமாறிய எக்ஸ்இ வகை கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை. அதனால் மக்கள் யாரும் தொற்று குறித்து கவலைப்பட தேவையில்லை என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், திருமங்கலம் அரசு தலைமை மருத்துவர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.