tamilnadu

img

பொங்கல் விடுமுறை நிறைவு நாகர்கோவில் ரயில், பேருந்து நிலையங்களில் குவிந்த மக்கள்

பொங்கல் விடுமுறை நிறைவு நாகர்கோவில் ரயில், பேருந்து நிலையங்களில் குவிந்த மக்கள்

நாகர்கோவில். ஜன. 18 - பொங்கல் விடுமுறை முடிந்ததால் ஊருக்குச்  செல்ல நாகர்கோவில் ரயில் மற்றும் பேருந்து நிலை யங்களில் அதிக அளவிலான மக்கள் குவிந்தனர்.  ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில்,  ஜன.15 முதல் 18 ஆம் தேதி வரையில் பொது விடுமுறையாகிவிட்டது. இந்த பொங்கல் பண்டி கையில் கலந்து கொள்ள, சென்னை, கோவை, திருப்பூர், சேலம், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் வேலை பார்த்தவர்கள், படித்தவர்கள்  என குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். ஞாயிற்றுக்கிழமையுடன் விடுமுறை முடிந்த தால் வேலைக்கு செல்லவும், பள்ளி, கல்லூரிக்கு செல்லவும் திரும்பி செல்ல ஏற்பாடுகள் செய்தனர்.  இதில் பலர் ரயில், பேருந்துகளில் முன் பதிவு  செய்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட இருக்கையில் அமர்ந்து பயணத்தை துவக்கி னர். முன்பதிவு செய்யாதவர்கள் பெரும்பாலா னோர் நாகர்கோவில் ரயில் நிலையத்தையும், வடசேரி பேருந்து நிலையத்தையும், ஆம்னி பேருந்து நிலையத்தையும் முற்றுகையிட்டனர். பேருந்து வரும்போது பைகளை தூக்கிக் கொண்டு இடம் பிடிக்க முயன்றனர். இதில் பெண்கள் பெரிதும் அவதியடைந்தனர். பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.  பேருந்துகள் வரவும் பயணிகள் கூட்டம் நிறைந்து  விடுவதால் அந்த பேருந்தை உடனடியாக இயக்க  உத்தரவிடப்பட்டது. இதில் பெரும்பாலானோர், திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை பகுதிக்குச் செல்லவே காத்திருந்தனர். இது குறித்து போக்குவத்துக் கழக அதிகாரி களிடம் கேட்டபோது, பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. அரசு விரைவு பேருந்து மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் என அதிகப் படியாக இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதனால் பயணிகள் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பத்திரமாக பயணம்  செய்யலாம் என்று தெரிவித்தனர். இந்த கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பேருந்து  நிலைய காவலர்கள், போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் பயணிகளுக்கு  பாதுகாப்பு அளித்ததுடன், உதவிகளும் செய்தனர்.