tamilnadu

img

பாலார்பட்டியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா

பாலார்பட்டியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா

தேனி,ஜன.16-  பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185 வதுபிறந்தநாள் விழா தேனி அருகே பாலார்பட்டியில் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடை பெற்றது. தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாத புரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் முக்கிய பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. காலம் கடந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சி மாறினாலும் இந்த அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கை மட்டும் இப்பகுதி மக்கள் இன்னமும் மறக்கவில்லை. அணை திறக் கப்பட்ட நாள்,  அவர் மறைந்த தினம் ஆகிய நாட்க ளில் அவரை மறக்காமல் வழிபட்டு வருகின்ற னர். இதன்படி ஜனவரி 15ஆம் தேதி அவரு டைய பிறந்தநாள் தேனி மாவட்டத்தில் பல பகு திகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   இதன் ஒரு பகுதியாக போடி அருகே உள்ள பாலர் பட்டியில் அவரது பிறந்த நாள் கொண்டா ட்டம் அதி விமரிசையாக நடைபெற்றது. 27 ஆவது ஆண்டாக இக்கிராமத்தில் நடை பெற்ற விழாவிற்கு பென்னிகுவிக் எழுச்சி பேரவை தலைவர் பாலார்பட்டி ஆண்டி தலைமை வகித்தார். பென்னிகுவிக் உருவ படத்தை ஏந்தியபடி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக சிலம்பாட்டம், மயிலாட்டம் இடம் பெற்றது. ரேஸ் மாடுகள், குதிரைகள், கிடாக் களை அலங்கரித்து ஊர்வலத்தில் அழைத்துச் சென்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் தங்கள் தலையில் பொங்கல் பானைகளுடன் சென்றனர் .இவர்களை மலர் தூவி கிராம மக்கள் வரவேற்றனர். தொடர்ந்து பென்னிகுவிக் கலையரங்கம் முன்பு ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடுகளை நடத்தினர். விளையா ட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சி நடைபெற்றது.