tamilnadu

img

பாலியல் வன்கொடுமைக்கு கடும் தண்டனை

சென்னை, ஜன.11- சென்னை அண்ணா பல்  கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்  கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக இந்திய மாணவர்  சங்கம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு மாணவர்  அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன.  இந்த விவகாரம் தமிழக  சட்டப்பேரவைக் கூட்டத்  தொடரிலும் தாக்கம் ஏற்ப டுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடு தல் தண்டனை வழங்கும் வகையில் இரண்டு சட்ட திருத்த மசோதாக்களை முத லமைச்சர் தாக்கல் செய்தார். இதில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய ஒன் றிய சட்டங்களில் உள்ள 17  சட்டப்பிரிவுகளில் கூறப்பட் டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமை யாக்கும் வகையில், திருத்  தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மீது, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலை வர்களும் பங்கேற்று தங்க ளின் கருத்துக்கள், ஆலோ சனைகளை வழங்கினர். மரண தண்டனையைப் பரிசீலிக்க வேண்டுகோள்! காங்கிரஸ் கட்சி சார்பில்  பேசிய செல்வப்பெருந் தகை, இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தக்கூடாது என்  றும் விழிப்புணர்வு பிரச்சா ரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத் தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன், பாலியல் குற்றத்தில் ஈடுபடு வோருக்கு கடுமையான  தண்டனை வழங்குவ தற்காக அரசு கொண்டு வந்தி ருக்கும் தீர்மானத்தை ஆத ரிக்கிறோம். அதே நேரத்தில்,  பாலியல் குற்ற வழக்கு களை 90 நாட்களில் முடித்து  தண்டனை வழங்க வேண் டும். நாடு முழுமைக்கும் மரண  தண்டனைக்கு எதிராக வலு வான எதிர்ப்பு குரல் எழுந்து  வருகிறது. ஆகவே, இது  குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார். முன்னதாக இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன் றக்குழுத் தலைவர் வி.பி.  நாகை மாலியும் வலியுறுத்தி னார். உறுப்பினர்களின் விவா தங்களுக்கு பின்னர் சட்டத்  துறை அமைச்சர் ரகுபதி சில  விளக்கங்கள் அளித்தார். அப்போது, பெண்களுக்கு முழு பாதுகாப்பு தரவேண்  டும் என்ற நோக்கத்திலேயே இந்த சட்டத்திருத்தங்கள் கொண்டு  வரப்பட்டுள்ளன என்றார். அதைத்தொடர்ந்து, குரல்  வாக்கெடுப்பு மூலம் இரண்டு சட்டத் திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஆணவப் படுகொலையையும் சேர்க்க சிபிஎம் வலியுறுத்தல்!

ஆணவப் படுகொலையையும் சேர்க்க சிபிஎம் வலியுறுத்தல்! பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய நக ரிக் சுரக்ஷா ஆகிய ஒன்றிய சட்டங்களில் தமி ழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்  பட்ட திருத்த மசோதாக்கள் மீதான  விவாதங்களில் பங்கேற்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்  குழுத் தலைவர் வி.பி.நாகை மாலி பேசினார். அப்போது, பெண்கள் மற்றும்  குழந்தைகள் மீதான பாலியல் வன்  கொடுமைக் குற்றங்களைக் குறைப்பதற்கும், குற்ற வாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் முதல மைச்சரால் கொண்டு வரப்பட்ட இரண்டு மசோ தாக்களை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில், பாலியல் தொல்லைகள் குறித்து கொடுக்கப்படும் புகார்களை காவல்துறையினர் காலதாம தம் செய்யக்கூடாது. தவறான புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. எந்த காரணத்தை கொண்டும் அர சியல் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் தலையீடு இருக்கக் கூடாது. மேலும், பாலியல் வன்கொடுமைகள் குறித்து மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். பாலியல் சமத்துவ கருத்துக்களையும் பிரச்சா ரம் செய்ய வேண்டும். இத்துடன், தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் ஆணவப் படுகொலை செய்யும் போக்கு அதிகரித்து விட்டது. இதைத் தடுப்ப தற்கும் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அதுவரைக்கும்,  ஆணவப் படுகொலை வழக்கில் கைது செய்யப்படும்  குற்றவாளிகளை மேற்கண்ட சட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.