ஜன.28-இல் கூடுகிறது நாடாளுமன்றம் பிப்.1-இல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்!
புதுதில்லி, ஜன. 9 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 28 அன்று கூடுகிறது. அதைத்தொடர்ந்து, 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற விவகாரங் களுக்கான அமைச்சரவைக் குழுவால் இறுதி செய்யப்பட்ட தற்காலிக அட்டவணையை மேற்கோள்காட்டி, அதிகாரிகள் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 28 அன்று கூட உள்ளது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 2026 - 27 நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். குடியரசுத் தலைவரின் உரை மற்றும் ஒன்றிய பட்ஜெட் ஆகியவற்றுக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவா தங்களுக்குப் பிறகு பிப்ரவரி 13 அன்று நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும். ஒரு மாத கால ஒத்திவைப்புக்குப் பிறகு மார்ச் 9 அன்று மீண்டும் துவங்கும் கூட்டத் தொடர், ஏப்ரல் 2 அன்றுமுடிவடையும். இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
