தேர்தல் பரப்புரையை துவங்கினார் பெ. சண்முகம்!
சென்னை, ஏப். 2 - 17ஆவது சட்டமன்றத் தேர்தலை யொட்டி, தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் களும் - வேட்பாளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், ஏப்ரல் 2 அன்று சேலத்தில் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கினார். தொடர்ந்து, ஏப்ரல் 3 அன்று கோயம்புத்தூரிலும், ஏப்ரல் 4 அன்று கடலூரிலும் பொதுக்கூட்டங்களிலும் பேசுகிறார். ஏப்ரல் 5 மற்றும் 6 தேதிகளில் சென்னையிலும், ஏப்ரல் 7 அன்று பழனியிலும், ஏப்ரல் 8 அன்று கந்தர்வக்கோட்டையிலும், ஏப்ரல் 9 அன்று கீழ்வேளூரிலும் பரப்புரை மேற்கொள்கிறார். இந்த முதற்கட்ட தேர்தல் பரப்புரையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தப் பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு அவர்களுக்கான சின்னங்களில் வாக்குகள் கோரி பெ. சண்முகம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
