tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

நமது கல்வியும், அதன் கட்டமைப்பும் Quality, Quantity, Equity (தரம், அளவு, சமவாய்ப்பு) ஆகிய மூன்று அம்சங்களை பிரதானமாக கொண்டிருந்தது. ஆனால் தற்போது அவை Centralisation, Commulisation, Commercialisation (மத்தியப்படுத்துவது, மதவெறிமயமாக்குவது, வியாபாரமாக்குவது) ஆகிய மூன்று அம்சங்களை கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானதாகும்.
ஆர்யபட்டாக்கள் நம்மிடமிருந்து உருவாகி இருக்கிறார்கள். ‘0’ விற்கான மதிப்பை கிபி ஆறாம் நூற்றாண்டில் நாம் தான் உலகிற்கு சொன்னோம். ஆனால் அதற்கு பிறகு வந்த ஆரியர்கள் கல்வியை நால்வர்ண முறைக்குள்ளாக பொருத்தினார்கள். ஏகலைவன் அதற்கான உதாரணம் தான். இன்றைய கல்வி முறையை அதன் நீட்சியாகவே மாற்றவே பாஜக - ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது.