முல்லைபெரியாற்றிலிருந்து 18ஆம் கால்வாய், பிடிஆர், தந்தை பெரியார் கால்வாய் திறப்பு
தேனி, அக்.2- முல்லைபெரியாற்றிலிருந்து 18ஆம் கால்வாய் (பழனிவேல் ராஜன் கால்வாய்), பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் கால்வாய் களிலிருந்து ஒரு போக பாச னத்திற்கான தண்ணீர் திறக்கப் பட்டது. நிகழ்ச்சியில் தேனி மக்களவை உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ஐ. மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் தேனி நாடாளு மன்ற உறுப்பினர் தங்க.தமிழ்ச் செல்வன் தெரிவித்ததாவது: 18 ஆம் கால்வாயிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பாளையம் மற்றும் போடி வட்டத்தில் 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வினாடிக்கு 98 கன அடி வீதம் 30 நாட்களுக்கு 255 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரி யார் கால்வாயிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர், 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு 1,037 மில்லி யன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொருத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விவ சாய பெருமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.