ஆம்னி பேருந்து கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு
நாகர்கோவில். டிச. 22- கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்ப முடியாத நிலையில் தென் மாவட்டத்தினர் தவிப்பில் உள்ளனர். அரசு பேருந்து,ரயில் முன்பதிவு முடிந்த விட்ட நிலையில், ஆம்னி பஸ் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை யொட்டி சென்னையில் இருந்தும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்க உள்ளனர். அரசு பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்டன. ரயில்களிலும் அனைத்து இருக்கை களும் நிரம்பி காத்திருப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்துகளை அதிகம் நம்பியுள்ளனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.5,000 வரையிலும், சென்னை - நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.6,000 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கட்டண உயர்வால் சாதாரண மக்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அரசு விரைவு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது, பொதுமக்கள் சேவைக்கு தென் மாவட்டங்களுக்கு வழக்கத்தை விட அதிக பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு அல்லாத உடனடி கட்ட ணத்தில் பயணம் செய்ய அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடனடியாக பேருந்துகள் ஏற்பாடுசெய்து இயக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அதைப்போல் பண்டிகைகள் முடிந்து திரும்பி வரவும் அதிக பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம் செலுத்தி சிரமத்தை அடையா மல் இருக்க பயணிகள் அரசு பேருந்துக ளில் உடனடி டிக்கட் எடுத்து பயணம் செய்ய லாம் எனதெரிவித்தனர். அரசு சட்டத்தை மீறி அதிக வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.