tamilnadu

img

பீகார் மாநிலத்தில்  வாக்காளர்களை அடித்து விரட்டிய அதிகாரிகள்

பீகார் மாநிலத்தில்  வாக்காளர்களை அடித்து விரட்டிய அதிகாரிகள்

பீகார் மாநிலத்தில் செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற்ற 2ஆம்  கட்டத் தேர்தலில் வார்சலிகஞ்ச்  சட்டமன்றத் தொகுதி யின் 172 மற்றும்  173ஆவது வாக்குப் பதிவு மையங்களில்  வாக்களிக்க விடாமல் அதிகாரிகள் வாக் காளர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக கேள்வி கேட்டதற்கு அதி காரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக 173ஆவது வாக்குப்பதிவு மையத்திற்கு அருகே வாக்களிக்க சென்ற  பொதுமக்களை வாக்குச்சாவடி அதிகாரி கள் மரக்கிளைகளால் அடித்து விரட்டி யுள்ளனர். நிர்மாலியிலும்... அதே போல நிர்மாலி சட்டமன்றத் தொகுதியின் 306, 307 வாக்குப்பதிவு மையங்களில், வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்களை மாவட்ட தலைமைத் தேர்தல் அதிகாரி அடித்து விரட்டியுள்ளார். காரணம் கேட்டால்,”வாக்காளர்கள் அட்டை கிடைக்காது, நீக்கிவிடுவேன். இனி மேல் வாக்களிக்க முடியாது”  என மிரட்டி யுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களை யும் ராஷ்டிரிய ஜனதாதளம் தனது டுவிட்  டர் எக்ஸ் பக்கத்தில் செய்தியாக குறிப் பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.