ஒடிசா பழங்குடியினத் தலைவர் சாலா மராண்டி கைது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
புவனேஸ்வரம் பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தின் தலை நகர் புவனேஸ்வரம் அருகே உள்ள “சாலியா சாஹி ஆதி வாசி கான்” பகுதியில் குடிசைவாசிகள் மற்றும் பழங்குடியினரின் உரிமை களுக்காகவும், கட்டாய இடப்பெயர்வு க்கு எதிராகவும் ஜனநாயக ரீதியில் போராடிய பழங்குடியினத் தலைவர் சாலா மராண்டி கைது செய்யப் பட்டுள்ளார். ஆதிவாசி அதிகார ராஷ்டி ரிய மஞ்ச் (AARM) அமைப்பின் ஒடிசா மாநில பொதுச் செயலாளரான சாலா மராண்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சிறையில் அவர் காவல்துறையின் தொடர் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகிறார். இந்நிலையில், சாலா மராண்டி யின் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒடிசா மாநிலக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பான அறிக்கையில், “சாலா மராண்டியின் தலைமைத்து வத்தை முடக்க, அவர் மீது தொடர்ச்சி யாக குற்றவியல் வழக்குகள் சுமத் தப்பட்டுள்ளன. அவருக்குப் பிணை (Bail) வழங்கப்பட்ட போதிலும், அவரை விடுவிக்காமல் வேண்டு மென்றே தாமதம் செய்வது, ஜனநாய கப் போராட்டங்களை ஒடுக்கவும் பழங்குடியினத் தலைவர்களை அச்சு றுத்தவும் ஒடிசா பாஜக அரசு மேற் கொள்ளும் தீவிர முயற்சி ஆகும். சட்டவிரோத காவலில் வைக்கப் பட்டுள்ள சாலா மராண்டியை உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துப் பொய் வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மக்களுக் காக போராடும் தலைவர்கள் மீதான காவல்துறை துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குச் சட்டப்பூர்வமான மறுவாழ்வு வழங்கப் பட வேண்டும். ஆனால் அடக்குமுறை கள் தொடர்ந்தால், ஒடிசா முழுவதும் ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடையும்” என சிபிஎம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காவல் ஆணையருடன் பிருந்தா காரத் சந்திப்பு முன்னதாக, வெள்ளியன்று சிபிஎம் மூத்த தலைவரும், ஆதிவாசி அதிகார ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பின் துணைத் தலைவருமான பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் சுரேஷ் சந்திர பாணிகிரஹி ஆகியோருடன் இணைந்து, கட்டாக் காவல் ஆணை யரை நேரில் சந்தித்து சாலா மராண்டி யை இன்னும் விடுதலை செய்யாத கார ணத்தை விளக்கமாக அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த னர்.
