tamilnadu

img

நியூயார்க் உமர் காலித்திற்கு நியூயார்க் மேயர் கடிதம் அமெரிக்காவின் நியூயார்க்

நியூயார்க் உமர் காலித்திற்கு நியூயார்க் மேயர் கடிதம் அமெரிக்காவின் நியூயார்க்

நகரின் மேயராக இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி வியாழனன்று பதவியேற்றார். இந்நிலையில், தில்லி கலவர வழக் கில் சுமார் 1,500 நாட்களுக்கும் மேல் சிறை யில் அடைக்கப்பட்டிருக்கும் ஜேஎன்யு முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு நியூயார்க் மேயர் மம்தானி கடிதம் எழுதியுள்ளார். அதில், “அன்புள்ள உமர், கசப்புணர்வைப் பற்றிய உங்களின் வார்த்தைகளையும், அது ஒருவரை அழித்துவிடக் கூடாது என்பது குறித்தும் நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். உங்களின் பெற் றோரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்  கிறது. நாங்கள் அனைவரும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக் கிறோம்” என குறிப்பிட்டிருக்கிறார். கடந்த மாதம் உமர் காலித்தின் பெற் றோர்கள் அமெரிக்கா சென்றிருந்த போது, அவர்களை மம்தானி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போதுதான் இந்தக் கடிதம் பரிமாறப்பட்டதாகக் கூறப் படுகிறது. உமர் காலித்தின் நண்பர் பனோஜ்யோத்ஸ்னா லாஹிரி இந்த கடிதத்தை தனது சமூகவலைதளத்தில் (டுவிட்டர் எக்ஸ்)  பகிர்ந்துள்ளார். முன்னதாக, 2023ஆம் ஆண்டு பிரத மர் மோடியின் அமெரிக்க வருகைக்கு  முன்னதாக நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், உமர் காலித்தின் சிறைக் குறிப்புகளை மம்தானி வாசித் தார். அப்போது அவர்,”வெறுப்புக்கும் கும்பல் கொலைகளுக்கும் எதிராகப் பேசிய ஒரு இளைஞரை, 1000 நாட் களுக்கு மேலாக விசாரணையின்றி சிறை யில் வைத்திருப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.