தீபாவளி பண்டிகையையொட்டி, மயிலாடுதுறை நகரில் புத்தாடை, பட்டாசு, இனிப்பு மற்றும் பொருட்கள் வாங்கிச் செல்ல மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளான கச்சேரி சாலை, பட்டமங்கலத் தெரு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக் கணக்கானோர் வந்து சென்ற காட்சி.