tamilnadu

img

தீபாவளி இறுதிகட்ட விற்பனை: கொட்டும் மழையில் கடைவீதிகளில் குவிந்த மக்கள்

தீபாவளி இறுதிகட்ட விற்பனை:  கொட்டும் மழையில் கடைவீதிகளில் குவிந்த மக்கள்

திருச்சிராப்பள்ளி, அக். 19-  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி பெரியகடை வீதி, சின்ன கடை வீதி, தெப்பக்குளம், சிங்காரத்தோப்பு, நந்திக்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிச் செல்வதற்காக மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.  இடையிடையே பெய்யும் மழையை சற்றும் பொருட்படுத்தாமல், குடை பிடித்துக் கொண்டு, கடைவீதிகளுக்கு வந்து புத்தாடைகளையும், இதர பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில், திருச்சி மாநகர தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி காந்தி சந்தை முதல் சத்திரம் பேருந்து நிலையம் வரை அனைத்து வீதிகளிலும் பயணிக்க கூடிய மக்களின் முகங்களை துல்லியமாக அடையாளம் காணும் வகையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தற்காலிக புறக்காவல் நிலையத்தில் இருந்தவாறு கண்காணித்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கையை ஏற்படுத்தினர். என்எஸ்பி சாலையில் 125 தற்காலிக கண்காணிப்பு கேமராக்களும், 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தஞ்சாவூர்  தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூரின் கடைவீதிகளில் தீபாவளி வியாபாரம் களை கட்டியுள்ளது. தஞ்சாவூர் ரயிலடியில் தொடங்கி, காந்திஜி சாலையில் கீழராஜவீதி வரை தெற்குவீதி, பழைய பேருந்து நிலைய பகுதிகள், அண்ணாசாலை, ஆப்ரகாம் பண்டிதர் சாலைகளில் தற்காலிக தரைக்கடைகள் அமைத்து, வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கம். அதே போல் இவ்வாண்டும் ஏராளமான சிறு சிறு வியாபாரிகள் வெளியூர் மற்றும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இந்த தீபாவளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளிக்குத் தேவையான பொருட்களை வாங்க தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இங்கு  கண்காணிப்பு கேமராக்கள்: பொதுமக்களின் பாதுகாபு கருதி, தஞ்சாவூர் நகர காவல்துறையினர், கடைவீதிகளில் அதிக அளவில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட தீயணைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்வுகளை மாவட்டம் முழுவதும் நடத்தியது.