tamilnadu

img

விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு தோழர் பி.ராமமூர்த்தி நினைவு சொற்பொழிவில் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு தோழர் பி.ராமமூர்த்தி நினைவு சொற்பொழிவில் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

தஞ்சாவூர், அக். 17- நாட்டின் இயற்கை வளங்களையும் விவசாய நிலங்களையும் கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்ப தில் தான் மோடி அரசு கவனம் செலுத்து கிறது என்று சிபிஎம் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் கே.பாலகிரு ஷ்ணன் கடுமையாக விமர்சித்தார்.  விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரு மான தோழர் பி.ராமமூர்த்தி நினைவு மூன்றாவது சொற்பொழிவு மற்றும் “பெருகி வரும் விவசாய நெருக்கடியும் விவசாயிகளின் வாழ்நிலையும்” என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கில் வியாழக்கிழமை (அக்டோபர் 16) மாலை இவ்வாறு தெரிவித்தார்.  தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் வரவேற் றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் வி.மாரிமுத்து (நாகை), எஸ்.சங்கர் (புதுக்கோட்டை), டி.முருகையன் (திரு வாரூர்), பி.சீனிவாசன் (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கே.பாலகிருஷ்ணன்  சிபிஎம் அரசியல் தலைமைக் குழு  உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உரையில், தோழர் பி.ராமமூர்த்தி சட்ட மன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பத்திரிகையாளர், நியூ ஏஜ்,  ஜனசக்தி, பத்திரிகை ஆசிரியர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் என்று சிறப்பித் தார். மாற்றுக் கருத்து உடையவர்களி டமும் விவாதிக்கும் நல்ல பண்பை கொண்டிருந்தார் என்றார்.  விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களின் நிலை சர்வதேச அள விலும் பின்தள்ளப்பட்டுள்ளது என்று  தெரிவித்த அவர், பாஜக ஆட்சியில் விவ சாயிகளின் நலன் குறித்து கவலைப் படவில்லை என்று விமர்சித்தார்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம், போதிய நெல் சேமிப்புக் கிடங்கு இல்லாமை, நெல் இயக்கம் இல்லாமல் மூட்டைகள் நனைவது போன்ற பிரச்சனைகளை எடுத்துரைத்த அவர், விவசாயிகள் நலனைப் பாதுகாக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.  “நாட்டின் இயற்கை வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுப்பதில் தான் ஒன்றிய அரசு கவனம் செலுத்துகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஷேல் எரிவாயு எடுப்பது, எண்ணெய்க் கிணறு அமைப்பது என்பதில் கவனம் செலுத்தி,  விவசாய நிலங்களைக் கைப்பற்றி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பது தான் மோடி அரசின் கொள்கையாக உள்ளது” என்று கடுமையாக விமர்சித்தார்.  “ஷேல் எரிவாயு எடுப்பது, எண்ணெய்க் கிணறு அமைப்பது யாருக் காக? விவசாய நிலங்களை பாழ்படுத்தி, அவர்கள் வாழ்வாதாரத்தை சேதப்படுத்தி, எண்ணெய், எரிவாயு எடுப்பது எதற்காக? சாதாரண விவ சாயிகளுக்காக அல்ல. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளி களின் நலனுக்காக தான்” என்று அவர் எச்சரித்தார்.  உலகம் முழுவதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வும், எரிவாயு, எண்ணெய்க்கிணறு திட்டங் களுக்கு எதிராக மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.  பி.ராமமூர்த்தி உரைகள் தொகுப்பு வெளியீடு  மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஆறு முக நயினார் அறிமுக உரையில், தோழர் பி.ராமமூர்த்தியின் 1952-54 மற்றும் 1954-56 கால உரைகள் இரண்டு தொகுப்புகளாக வெளியிடப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். தோழர் ஆர்.வைகை, நர்மதா தேவி, வீ.பா. கணேசன் ஆகியோரின் உதவியுடன் இவை மொழிபெயர்க்கப்பட்டு வெளி யிடப்பட்டதாக நன்றி தெரிவித்தார். மூன்றாம், நான்காம் தொகுதிகளும் நாடாளுமன்ற உரைகளும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். விவசாய நெருக்கடி குறித்த விவாதம்  மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை உரையில், 20 வயதில் சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான தோழர் பி.ராமமூர்த்தி, 1936-37இல் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு ஆழமான பொதுவுடமைவாதியாக மாறினார் என்று தெரிவித்தார். 1940, 50, 60 காலகட்டங்களில் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள், விவசாயத்  தொழிலாளர்களுக்காக பி.ராமமூர்த்தி, பி.எஸ்.ஆர், ஜீவா ஆகியோர் பெரிய போராட்டங்களை நடத்தினர் என்று நினைவுகூர்ந்தார்.  1952இல் தோழர் பி.ராமமூர்த்தி சட்டமன்ற உறுப்பினரான பின்னர் பண்ணை அடிமை முறை ஒழிப்பு, தொழி லாளர்களுக்கு குடிவாரம் உரிமை, விவசாயிகள் பாதுகாப்பு மசோதாக் களைக் கொண்டு வந்தார் என்றார். தற்போது தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம், போதிய சேமிப்பு கிடங்கு இல்லாமை காரணமாக விவ சாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.  இயற்கை வளங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படு வதை விமர்சித்த அவர், இந்த கருத்த ரங்கின் நோக்கம் பி.ராமமூர்த்தியின் வாழ்க்கையில் இருந்து படிப்பினை களைப் பெறுவதே என்றார்.  ‘தோழர் பி.ஆர் சட்டமன்ற, நாடாளு மன்ற உரைகள் - பாகம் 2’ நூலை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.ஆறுமுக நயினார் வெளியிட, முன்னாள் மாநிலச்  செயற்குழு உறுப்பினர், மூத்த தலைவர்  என்.சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.  பி.சாய்நாத் பிரபல மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் கருத்துரையாற்றினார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு  சார்பில் தஞ்சாவூர் தட்டு நினைவுப் பரி சாக வழங்கப்பட்டது. மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.செல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள், இடைக் கமிட்டி செயலாளர் கள், கிளைச் செயலாளர்கள், அரங்கத் தோழர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  - ந.நி