tamilnadu

மதுரா, காசி மசூதிகளை முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமாம்! எதிர்ப்பைத் திசைதிருப்ப மதவெறியைத் தூண்டுவதா

மதுரா, காசி மசூதிகளை முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமாம்!

எதிர்ப்பைத் திசைதிருப்ப  மதவெறியைத் தூண்டுவதா

மோகன் பகவத்திற்கு  சிபிஎம் அரசியல்  தலைமைக் குழு கண்டனம்

புதுதில்லி, ஆக.30- மதுரா, காசியில் உள்ள மசூதிகளை  முஸ்லிம்கள் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: சகோதரத்துவத்திற்கு  முன் நிபந்தனை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆற்றிய உரையை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அர சியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது கருத்துக்கள் இந்திய அரசியலமைப்பை ஆர்எஸ்எஸ்  மதிக்காத போக்கையே பிரதிபலிக்கி றது. மேலும் அவை நாட்டின் சட்டத்தை  மீறுவதாக உள்ளது. தில்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய மோகன் பகவத், மதுரா  மற்றும் காசி தாவாக்களை மீண்டும்  எழுப்ப முயன்றுள்ளார். ‘சகோ தரத்துவத்திற்கு’ ஒரு முன்நிபந்தனை யாக முஸ்லிம்கள் இந்த இரண்டு இடங்களிலும் உள்ள மசூதிகளை ‘விட்டுக்கொடுக்க’ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பை  மதிக்காத ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னணியில், 1947-க்கு முன்பு இருந்த எந்தவொரு  மத வழிப்பாட்டுத் தலங்களையும் மாற்றி யமைப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறை வேற்றியது. இந்தச் சட்டத்தின்படி, மதுரா மற்றும் காசி இரண்டிலும், மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களி லும் தற்போதைய நிலை, அப்படியே தொடர வேண்டும். மாறாக, மோகன் பகவத் முன்வைக் கும் விஷயங்கள், வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுவதையும், பொதுமக்களின் கவனத்தைத் திசைத் திருப்புவதையும், மத ரீதியாக சமூ கத்தை பிளவுபடுத்துவதையும் நோக்க மாகக் கொண்டுள்ளன. மக்களின் கோபத்தைத் திசைத்திருப்ப முயற்சி விரைவில் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடை பெறவுள்ள நிலையில் பாஜக அரசாங் கம் மீதான மக்களின் கோபத்தை மட்டுப்படுத்த, ஆர்எஸ்எஸ் தலைவர் இந்த பிளவுபடுத்தும் பிரச்சனைகளை எழுப்பி வருகிறார். எப்போதெல்லாம் பொருளாதாரம் மோசமடைகிறதோ அப்போதெல்லாம் அந்த பிரச்சனை களில் இருந்து மக்களைத் திசைத் திருப்ப வகுப்புவாத விஷயத்தை எழுப்புவதை ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் நடைமுறையாக கொண்டிருக்கின்றன. அமெரிக்கா உயர்த்திய வரிகள்,  பலவீனமடைந்து வரும் பொருளாதா ரம், விவசாயிகள் மற்றும் தொழிலா ளர்கள் மீது அதிகரித்து வரும் தாக்கு தல்கள், தேர்தல் முறைகேடுகள் மற்றும்  அதுகுறித்து நாளுக்கு நாள் வெளி யாகும் ஆதாரங்கள் ஆகியவற்றால், பாஜக தலைமையிலான அரசாங்கம் மீது பொதுமக்களின் நம்பிக்கை தகர்ந்து வருகிறது. பாஜக அர சாங்கத்தின்  தோல்விகளை மக்கள்  தெளிவாக பார்க்கத் தொடங்கியுள்ள னர். நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இந்நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் பிளவுபடுத்தும் கொள்கைகளுக்கு எதி ராக விழிப்புடன் இருக்குமாறு நாட்டு  மக்களை சிபிஐ(எம்) கேட்டுக்கொள் கிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும்  ஒருமைப்பாடு மிகவும் முக்கியமா னது, மேலும், அவை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டும். இந்த லட்சியத்தை அடைய,  அனைத்துப் பிரிவு மக்களையும் ஒன்றி ணைத்து விரிவான எதிர்ப்பை உரு வாக்குவது மிகவும் அவசியம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்  பட்டுள்ளது.