தலித் பெண் படுகொலை உ.பி., மீரட் மாவட்டத்தில் பதற்றமான சூழல்
லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர் தானா பகுதியைச் சேர்ந்தவர் சத் யேந்திர குமார் (தலித் சமூகம்). இவ ரது சுனிதா தேவி. இந்த தம்பதிக்கு ரூபி குமாரி (20) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், வியாழனன்று காலை சுனிதா தேவியும் அவரது மகளும் வயலுக்குச் சென்றபோது, இருவரையும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பாராஸ் சிங் (25) மற்றும் அவ ரது நண்பர்கள் வழிமறித்து, ரூபி குமாரியை கடத்த முயன்றனர். இதனை தடுத்த சுனிதா தேவியை, பாராஸ் சிங் கோடாரியால் தாக்கி விட்டு, ரூபி குமாரியை கடத்திச் சென்றார். பலத்த காயமடைந்த அவர் வெள்ளியன்று மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். இத்தகைய சூழலில், சுனிதா தேவி கணவர் சத்யேந்திர குமார், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தனது மகள் பாதுகாப்பாக மீட்கப் படும் வரை மனைவியின் இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் மீரட் மாவட்ட தலித் மக்களும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி எம்எல்ஏ, தொண்டர் கள் போராடி வருகின்றனர். இத னால் மீரட் மாவட்டத்தில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. திசைதிருப்பும் முயற்சி பாராஸ் மற்றும் ரூபி இடையே காதல் விவகாரம் இருந்ததாகக் கூறி காவல்துறையினர் வழக்கை திசைதிருப்ப முயல்வதாக உற வினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பாராஸ் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபோது, கிராம பஞ்சாயத்து அவருக்கு ரூ.50,000 அபராதம் விதி த்து வழக்கை முடிக்கச் சொன்ன தாகவும் காவல்துறை மூலம் செய்தி கள் வெளியாகியுள்ளன. புல்டோசர் நடவடிக்கை பாயுமா? இந்த சம்பவத்திற்கு கடும் கண் டனம் தெரிவித்த சமாஜ்வாதி எம்எல்ஏ அதுல் பிரதான், ”பாதிக் கப்பட்ட தலித் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் குற்றவாளிகளின் வீடுகள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பினார்.