tamilnadu

img

மோடி அரசின் அலட்சியமே ரயில் விபத்துக்கு காரணம்

மும்பை உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் புதனன்று மாலை 5 மணியள வில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் (மும்பையில் இருந்து 400 கிமீ தொலைவில்) பசோரே அருகே மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. பி-4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. இதனை கண்ட பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி யுள்ளார்.  தீப்பிடித்ததன் காரணமாகவே ரயில் நின்றது என்ற தகவல் மின்னல் வேகத்தில் பரவியுள்ளது. அதனால் உயிர்பிழைக்க தங்களது உடைமை களை எடுத்துக் கொண்டு 40க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலை விட்டு குதித்து தண்டவாளத்தின் மறுபகு திக்கு ஓட முயன்றனர்.  அப்பொழுது பெங்களூருவில் இருந்து தில்லி நோக்கி சென்ற கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் தண்ட வாளத்தை கடக்க முயன்ற பய ணிகள் மீது அதிவேகத்தில் மோதி யது. இதனால் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே 11 பயணிகள் உயிரி ழந்தனர். படுகாயமடைந்த 5 பயணிகள் ஜல்காவ் மாவட்ட மருத் துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். அவர்களில் மேலும் 2 பேர்  உயிரிழந்தனர். இதன்மூலம் வியா ழனன்று மாலை நிலவரப்படி ஜல் காவ் ரயில் விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மோடி அரசே காரணம் மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டின் முக்கிய பொதுத்துறை யான ரயில்வே துறையை தனியார் மயமாக்கி தனது நண்பர் அதானி யிடம் தாரைவார்க்க திட்டமிட்டு வரு வது நாடறிந்த விஷயம். இதற்காக ரயில்வே துறைக்கான பட்ஜெட்  உள்ளிட்ட அனைத்து நிதியையும் மோடி அரசு வெகுவாக குறைத்து  வருகிறது. அடிப்படை வசதிகளு க்கு கூட போதுமான அளவு நிதி யின்றி ரயில்வே துறை திண்டாடி வருவதால் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 4 முதல் 5 ரயில் விபத்து சம்பவங்கள் நிகழ்ந்து வரு கின்றன. தற்போதைய சூழலில் நாட்டில் ரயில் விபத்து என்பது சர்வ சாதாரண செய்தியாக மாறியுள் ளது. இதன்காரணமாகவே புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த சிறிய தீவிபத்து கூட பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி 13 உயிரை காவு வாங்கி யுள்ளது. மோடி அரசின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த ரயில் விபத்து  நிகழ்ந்துள்ளது என சமூகவலைத் தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.  மனித தவறாம்; பாஜகவுக்கு எதிராக குவியும் கண்டனம் ரயில்வே துறைக்கு அவதூறு ஏற்படும் என்ற அச்சத்தில் பாஜக வைச் சேர்ந்தவர்கள் சிலர் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடிக்க வில்லை ;  இது வெறும் புரளி ; மனித தவறால் நிகழ்ந்தது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரி வித்து ரயில் விபத்து சம்பவத்தை திசை திருப்பி வருகின்றனர். புரளி யாக இருந்தாலும், மோடி ஆட்சி யில் ரயில் விபத்துகள் சகஜமாக நிகழ்ந்து வருவதன் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தில் உயிர் பிழைக்க ரயிலை விட்டு இறங்கி விபத்தில் சிக்கி மாண்டுள்ளனர் என சமூகவலைத்தளங்களில் பாஜ கவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ரயில் வளைவில்  நின்றதால் கோர விபத்து அபாயச் சங்கிலியைப் பிடித்த தும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்க ளுக்கு இடையே உள்ள ஒரு வளை வில் நின்றது. வளைவில் நின்றது காரணமாகவே கர்நாடக எக்ஸ் பிரஸ் ரயிலை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் பொழுது பயணிகள் விபத்தில் சிக்கியுள்ளனர். ரயில் இன்னும் 500 மீ தூரத்தில் நகர்ந்து சென்று நின்று இருந்தால் பயணிகள் கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயிலை கவ னித்து இருந்திருப்பார்கள். 13 பேர் பலியாகும் அளவிற்கு கோர விபத்தும் நிகழ்ந்து இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.