tamilnadu

img

பிஎம் கேர்ஸ் நிதி குறித்து கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரம் இல்லையாம்!

பிஎம் கேர்ஸ் நிதி குறித்து கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரம் இல்லையாம்!

புதுதில்லி 2020ஆம் ஆண்டு இந்தியா உட்பட உலகநாடுகளில் கொரோ னா அலை தீவிரமாக இருந்தது. கொரோனா அலையிலிருந்து மக்க ளை பாதுகாப்பதாகக் கூறி, மார்ச் 27ஆம் தேதி (2020) “பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி (பிஎம் கேர்ஸ் - PM Cares)” என்ற நிதியத்தை உருவாக்கி பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டார். மக்கள் பாதுகாப்புக்கான நிதி என்பதால் பல தரப்பிலிருந்தும், அதாவது பிரபலமான மனிதர்கள், நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் சாமானிய மக்களிடமிருந்து கோடிக்க ணக்கில் நிதி குவிந்தது. அறிவிப்பு வெளியிட்ட ஒரே வாரத்தில், ரூ.6,500 கோடி(65 பில்லியன்) வரை நிதி குவிந்தது. பின்னர் ரூ.10,000 கோடி  (100 பில்லியன்) வரை நிதி குவிந்திருக்கு மென்றும் செய்திகள் வெளியாகின. எதிர்ப்பு 2020ஆம் ஆண்டிலேயே பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. காரணம் 1948ஆம் ஆண்டிலிருந்தே “பிரதம மந்திரி நிவாரண நிதி (PMNRF)” என ஒன்று இருக்கும் போது,  பிஎம் கேர்ஸ் எதற்கு?  என இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால் மோடி உள்ளிட்ட யாரும் பதிலளிக்கவில்லை. கொரோ னா அலையால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் மக்க ளுக்காக பிஎம் கேர்ஸ் நிதி செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இதனால் அந்த நிதியத்தின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்த நிதியம் எப்படி நிர்வகிக்கப்படப் போகிறது? எவ்வளவு நிதி நன்கொடையாகப் பெறப்பட்டது? யாரிடமிருந்து எவ்வளவு தொகை பெறப்பட்டது? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக கேள்விகள் எழுந்தன. ஆனால் இந்த கேள்விகளுக்கு மோடி அரசு பதிலளிக்காமல் சாக்குப் போக்கு கூறியது. மீண்டும் மழுப்பல் இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்கள் பிஎம் கேர்ஸ் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு  மக்களவைச் செயலகத்திடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளது பிரதமர் அலுவலகம். 2026 ஜனவரி 30ஆம் தேதியன்று அளிக்கப்பட்ட கடிதத்தில்,”பிஎம் கேர்ஸ் நிதி, பிரதமரின் தேசிய நிவாரண நிதி (பிஎம்என் ஆர்எப்) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (என்டி எப்) தொடர்பான நாடாளுமன்றக் கேள்விகள் மற்றும் விவகா ரங்கள், மக்களவை அலுவல் நடைமுறை விதிகளின் கீழ் அனுமதிக்கத்தக்கவை அல்ல. மக்களவை அலுவல் நடைமுறை விதிகளின் 41(2) (viii) மற்றும் 41(2)(xvii) ஆகிய பிரிவு களின் கீழ் அனுமதிக்கப்படாது.  1)விதி 41(2) (viii) - இந்திய அரசாங்கத்தின் கவ லையாக இல்லாத ஒரு விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கக் கூடாது. அதனைப் பற்றி பேசக் கூடாது. 2)விதி 41(2) (xvii) - இந்திய அரசாங் கத்திற்கு முதன்மையாகப் பொறுப்பில்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் கட்டுப் பாட்டில் உள்ள விவகாரங்களை எழுப்பக்கூடாது.  மூன்று நிதியங்கள் குறித்த தகவல்களைக் கோரும் கேள்விகள் அல்லது பூஜ்ஜிய நேரம் அல்லது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஆகியவற்றின் ஏற்புத்தன்மையை தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், இந்த விதிகளில் உள்ள நிபந்தனைகளைப் பயன் படுத்தலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது பிஎம் கேர்ஸ் உள்ளிட்ட நிதியங்கள்  தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகள் மற்றும் விவகாரங்கள் அனுமதிக் கப்படாமல், இந்திய அரசுக்கு சம்மந்தம் இல்லாத விஷயங்கள், அரசின் பொறுப்பின்கீழ் வராத அமைப்புகள், தனி நபர்கள் குறித்து கேள்வி எழுப்பக் கூடாது என்ற விதிகளை சுட்டிக் காட்டி, பிஎம் கேர்ஸ், பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி குறித்து கேள்வி எழுப்ப எம்.பி.க்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூற வேண்டும் என மோடி அரசின் பிரதமர் அலுவலகம் கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது. பதில் இல்லை இதுதொடர்பாக மேலும் விளக்கம் கேட்டு ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் மின்னஞ்சல் மூலமாக பிரதமர் அலுவலகம், மக்களவைச் செயலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால் இந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகம் இதுவரை பதிலளிக்கவில்லை. அதே போல மக்களவைச் செயலகத்தின் (ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவு) இணைச் செயலாளர் முகேஷ் குமார் சர்மாவும் இது குறித்த கருத்துத் தெரிவிப்பதற்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.