உன்னாவ் பாலியல் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு சிறுபான்மையினர், மனித உரிமைகள் மீதான தாக்குதலுக்கு மாதர் சங்கம் கடும் கண்டனம்
சென்னை, டிச.26 - உன்னாவ் பாலியல் குற்ற வாளிக்கு தண்டனை குறைப்பு, சிறு பான்மையினர், மனித உரிமை கள் மீதான தாக்குதலுக்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் அண்மைக் கால மாக நடைபெற்ற மூன்று முக்கிய சம்பவங்கள், அரசு மற்றும் நீதித் துறை தலையீடுகள், மத நல்லி ணக்கம், சிறுபான்மையினர் பாது காப்பு ஆகியவற்றை கேள்விக்கு உள்ளாகியுள்ளதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது. உன்னாவ் சிறுமிக்கு எதிரான மிகக் கொடூரமான பாலியல் வன்மு றையில் தண்டிக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் தண்டனை குறைப்பு, நீதி மன்றம் ஆட்சியாளர்களின் மத வெறிக் கொள்கைகளுக்கும் அதிகா ரத்திற்கும் அடிபணிந்து செயல்படு கிற போக்கை உறுதிப்படுத்துகிறது. பெண்களின் பாதுகாப்பு முழுவது மாக பறிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் பேசப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு செய்திருப்பது நீதிமன்றங் களின் மீதான நம்பிக்கையை குறைக் கிறது. எவ்வளவு மோசமான பாலி யல் வன்முறை செய்திருந்தாலும் அரசு, ஆட்சி, அதிகாரம், நீதிமன்றம் துணையோடு குற்றவாளி தப்பிக்க லாம் என்பது ஆபத்தான போக்காகும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், பாதிக்கப்பட்ட பெண்ணுக் கும் குடும்பத்தாருக்கும் முழு நீதி யைப் பெற்றுத் தரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் குற்றச் சாட்டு கூறி, மதவெறியின் கோரச் செயலால் கொல்லப்பட்ட முகமது அக்லாக் வழக்கை வாபஸ் பெறு வதற்கான முயற்சிகளை உத்தரப்பிர தேச அரசு மேற்கொண்டது. இது, கொடூரச்செயல் செய்த குற்ற வாளிகளுக்கு தண்டனையை தளர்த்தும் முயற்சியும், இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மை அடிப்படையை தாக்குவதும் ஆகும். இத்தகைய நடவடிக்கைகள், மதவெறி அரசியலை ஊக்குவித்து, நாட்டின் சமூக ஒற்று மைக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் மத வேறுபாடுகள் இன்றி கொண்டாடப் படும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி கள், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படு கிறது. சத்தீஸ்கர், ஒடிசா, அசாம், மாநி லங்களில் கிறிஸ்துமஸ் கொண்டா ட்டத்தின் போதும், கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனையின் போதும் பாரதிய ஜனதா கட்சி தொடர்புடைய இந்துத்துவா அமைப்புகள் தாக்கு தல் நடத்தியிருப்பது இந்திய அர சியலமைப்புச் சட்டம் வழங்கி யிருக்கும் மத சுதந்திரம் மீதான கடும் தாக்குதலாகும். மதச்சார்பற்ற பாரம்பரியத்தை யும் ஜனநாயக மரபையும் அவ மதிப்பதாகும். இது வெறுப்பு அர சியலையும், பாஜக அரசின் பொறுப் பின்மையையும் வெளிப்படையாக காட்டுகிறது. மேற்கண்ட இச்சம்ப வங்களுக்கு எதிராக, நாடு முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டங்களை தொடர உள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உன்னாவ் பாலியல் வன்முறை குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் தண்டனை குறைப்பு, அக்லாக் வழக்கில் தண்டனைக் குறைப்பு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல் ஆகியவற்றை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும் என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.