tamilnadu

முந்தைய ஆட்சியை விட அதிக நெல் கொள்முதல்: தமிழக அரசு விளக்கம்

முந்தைய ஆட்சியை விட அதிக நெல் கொள்முதல்: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முந்தைய ஆட்சிக் காலத் தைவிட தற்போது கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைவித்த நெல்மணிகள் வீணா காமல் பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொள்முதல் தரவுகள்:  * முந்தைய ஆட்சி (2016-2021): ஆண்டுக்கு சராசரியாக 22.70 லட்சம் மெட்ரிக் டன்.  * தி.மு.க. ஆட்சி (2021-2025): ஆண்டுக்கு சரா சரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன். இதன்படி, முந்தைய ஆட்சியைவிட 19.91 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய் யப்பட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவம் செப்.  1 ஆம் தேதியே தொடங்கப்பட்டதால், பருவமழைக்கு முன்பே விவசாயிகள் நெல்லை விற்க முடிந்தது. விவசாயிகளின் நலன் கருதி, நெல்லின் ஈரப்பத அளவை 17%லிருந்து 22% ஆக அதிகரிக்கக்  கோரி முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பிய கடி தத்தை ஏற்று, ஆய்வு செய்ய மூன்று வல்லுநர் குழுக்களை ஒன்றிய அரசு நியமித்துள்ளது எனவும் அரசு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.