அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டம், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ரூ. 7,500 உதவித்தொகை, ரூ. 500 மருத்துவ உதவித்தொகை, அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச் சலுகை ஆகியவற்றைக் கொண்ட இத்திட்டத்தின் கீழ், 100 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணையை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் புதன்கிழமையன்று வழங்கினார்.
