tamilnadu

சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்பிக்கள் மீது ‘உரிமை மீறல்’ புகார் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் மோடி அரசு!

சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்பிக்கள் மீது ‘உரிமை மீறல்’ புகார் எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் மோடி அரசு!

சென்னை, டிச. 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் மீது, ஒன்றிய பாஜக அரசானது, ‘உரிமை மீறல்’ புகாரை முன் வைத்திருப்பது, எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: பாஜக எம்.பி.க்கள் புகாரில்  உரிமை மீறல் நோட்டீஸ் நாடாளுமன்றத்தில், 2025 டிசம்பர் 18 அன்று கிராமப்புற எளிய மக்களின் வாழ்வுரிமை புகலிட மாகத் திகழும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றவும், அதன் உள்ளடக்கத்தை நீர்த்துப் போகவும் செய்கிற ‘விபி ஜி ராம் ஜி’ சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்ததற்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மக்களவைத் தலைவர் இருக்கைக்கு முன்பாக வந்து குரல் எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கான புகார் பாஜக எம்.பி.க்கள் டாக்டர் நிஷிகாந்த் துபே, டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால், பி.பி. சவுத்ரி, பி.சி. மோகன் ஆகியோரால் தரப்பட்டு, அதன் அடிப் படையில் உரிமை மீறல் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாண்புகளை  குலைக்கும் பாஜக அரசு நாடாளுமன்ற விதிகளை இயந்திரகதியாக அமலாக்க இயலாது, அதன் எழுத்து மட்டுமின்றி எண்ணமும் உயிர்ப்போடு செய லாக்கம் பெற வேண்டும். ஆனால், இன்றைய  பாஜக ஆட்சியாளர்களிடம் இத்தகைய நாடாளு மன்ற மாண்புகளை எதிர்பார்க்க இயலுமா! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குர லுக்கு செவி சாய்க்கும் பண்பு அற்றவர்களாக பாஜக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்ப தையே மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத் திருத்தத்தின் போது அவர்களின் அணுகு முறை வெளிப்படுத்தியது.  நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகளின் இருப்பு என்பதை சற்றும் மன தில் கொள்ளாமல் ஜனநாயக மறுப்பை வெளிப் படுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தில் 50  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமா னோர் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்தும், அச்சட்ட வரைவை நாடாளுமன்றத் தின் தெரிவுக்குழு அல்லது நிலைக்குழு பரிசீல னைக்கு கூட அனுப்புவதற்கு அரசு தயாராக இல்லை. இதற்கான மக்களின் உணர்வை, குமுறலை, கோபத்தை மக்கள் பிரதிநிதிகள் வெளிப்படுத்தினார்கள் என்பதே உண்மை. ஆதாரமின்றி நாடாளுமன்றத்தை முடக்கிய ஆளும் பாஜகவினர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதால், அவை ஒத்தி வைக்கப் படுவதை நாடு கண்டிருக்கிறது. ஆனால், பாஜக ஆளும் கட்சியாக இருந்த போதிலும் கூட  எப்படி நடந்து கொள்கிறார்கள், அவை நிகழ்ச்சி களை எப்படி தடுக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கோ ஒரு பேரணியில் யாரோ ஒருவர் மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பினார், கர்நாடகா அமைச்சர் ஒரு கருத்தைக் கூறினார் என்று சொல்லி ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், நாடா ளுமன்றம் முடக்கப்பட்டதைக் கூட, இந்த குளிர் காலத் தொடரிலேயே கண்டோம். நாடாளு மன்றத்தின் நிலைக் குழுக்களுக்கு 10 சத விகிதம் சட்ட வரைவுகள் கூட அனுப்பப்படு வது இல்லை. பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரு வதே அபூர்வமாக உள்ளது. இதெல்லாம் இவர் கள் நாடாளுமன்றத்திற்கு தருகிற மரியாதையா? ஆனால் மக்களின் பிரச்சனைகளுக்காக, வாழ்வுரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக குரல்  கொடுத்தார்கள் என்பதற்காக உரிமை மீறல் அறிவிப்பாணை விடுப்பதெல்லாம் ஜனநாயக விரோதம், மற்றும் அச்சுறுத்தல் செயலாகும். மக்களின் கவனத்தைத் திசைத்திருப்பும் உத்தி சர்ச்சைகளை தவிர்ப்பதே அரசியல் முதிர்ச்சி ஆகும். ஆனால், பாஜக ஆட்சியாளர்களோ சர்ச்சைகளை உருவாக்கி மக்கள் கவனத்தை திசை திருப்புவதையே உத்தியாகக் கொண்டி ருக்கிறார்கள். எளிய மக்களின் வேலை உரிமை யை பறிக்கிற சட்ட வரைவில் இருந்து கவ னத்தைத் திருப்புவது இதுபோன்ற அராஜக நடவடிக்கைகளின் நோக்கமாகும். மக்களவைத் தலைவர் இத்தகைய உள் நோக்கங்கள் கொண்ட புகார்களை புறந்தள்ள வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது. மக்கள் பிரதிநிதிகளின் உணர்வுகளையும், கருத்துக்களையும் அவமதிக்கும் பாஜகவுக்கு வன்மையான கண்டனங்களையும் தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.