tamilnadu

img

தொழிலாளர்களின் பிரதிநிதித்துவ உரிமையைப் பறிக்கும் மோடி அரசு

தொழிலாளர்களின் பிரதிநிதித்துவ உரிமையைப் பறிக்கும் மோடி அரசு

புதுதில்லி, மார்ச் 22- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாகக் கட்டமைப்பில் (Corporate Gover nance) தொழிலாளர்களின் பிரதிநிதித்துவ உரி மையை உறுதி செய்யாமல், பாஜக அரசு அதைத் திட்டமிட்டுப் பறித்து வருவது நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தொழிலாளர் பிரதிநிதித்துவம் குறித்த நேரடி கேள்வி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நிர்வாக அமைப்புகளில் தொழிலாளர்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும், பிற பங்கு தாரர்களின் பங்கேற்பை உறுதி செய்யவும் ஒன்றிய அரசு ஏதேனும் திட்டமிட்டுள்ளதா? இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சரின் மழுப்பல் பதில் இந்தக் கேள்விக்கு கார்ப்பரேட் விவகாரங்கள்  துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா அளித்துள்ள பதில், தொழிலாளர்களின் உரிமை களைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்து உள்ளது. அமைச்ச ரின் பதிலில் “தொழி  லாளர் பிரதிநிதித்துவம்” (Worker Representation) என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக “பங்குதாரர்கள்” (Stakeholders) மற்றும் “முதலீட்டாளர்கள்” (Shareholders) என்ற பொதுவான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் பங்கேற்பு குறித்த உண்மை  நிலையை அரசு மறைத்துள்ளது. நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ‘பங்கு தாரர்கள்’. ஆனால், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத் தங்களின் உடல் மற்றும் மூளை உழைப்பைத் தாரை வார்ப்பவர்கள் ‘தொழிலாளர்கள்’. அமைச்சர் தனது பதிலில் முத லீட்டாளர்களுக்கான இ-வோட்டிங் (E-voting), பங்குதாரர் கமிட்டி ஆகியவற்றைப் பற்றி மட்டுமே பேசியுள்ளார். ஆனால், நிர்வாகத்தில் உழைப்பாளர்களுக்கான அதிகாரப் பகிர்வு  குறித்து எவ்விதத் தகவலையும் வெளியிடாமல் மழுப்பியுள்ளார். பழைய சட்டங்களைப் பட்டியலிடும் பாஜக அரசு புதிதாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  கேள்வி கேட்டால், ஏற்கனவே 2013-ஆம் ஆண்டு அமலில் இருக்கும் நிறுவனங்கள் சட்டத்தையே (Companies Act, 2013) அமைச் சர் மீண்டும் பட்டியலிட்டுள்ளார். அந்தச் சட்டத்தில்  இயக்குநர் குழு கூட்டங்கள் மற்றும் பங்கு தாரர் கூட்டங்கள் மூலம் முடிவெடுக்க வழிவகை  இருப்பதாகக் கூறி, தொழிலாளர் பிரதிநிதித்து வம் என்ற கோரிக்கையைத் திசைதிருப்பியுள்ளார். மேலும், தொழிலாளர்களின் நிர்வாகப் பங்கேற்பு குறித்துப் பேசாமல், பெண் இயக்கு நர்கள் மற்றும் சுயேச்சை இயக்குநர்கள் நிய மனம் குறித்த தரவுகளைக் கூறி கேள்வியின் நோக்கத்தையே மாற்றியுள்ளார். தொழிலாளர்கள் வெறும்  ‘புகார் அளிப்பவர்களா?’ தொழிலாளர்கள் நிர்வாக ரீதியான முடிவெ டுக்கும் கூட்டங்களில் பங்கேற்பது குறித்து சச்சி தானந்தம் கேட்ட கேள்விக்கு, தொழிலா ளர்கள் ‘புகார் அளிக்க’ (Whistle blower policy) வசதி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார். இது, தொழிலாளர்களை நிர்வாகத்தில் பங்குதாரர்களாகப் பார்க்காமல், வெறும் ‘புகார் அளிப்பவர்களாக’ மட்டுமே அரசு  கருதுவதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. விமர்சனம் ஒன்றிய அரசின் இந்தப் பதில் குறித்துத் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனங்களின் முடிவெடுக்கும் அமைப்புகளில் தொழிலாளர்களுக்கு அதி காரம் அளிக்கும் எண்ணம் மோடி அரசுக்குச்  சிறிதும் இல்லை என்பதையே இந்தப் பதில்  காட்டுகிறது. இது தொழிலாளர்களை வஞ்சித்து விட்டு, பெரும் முதலீட்டாளர்களுக்கும் கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கும் பாஜக அரசு காட்டும் விசுவாசமாகும். உழைக்கும் வர்க்கத்தின் குரலை நிர்வாகக் கட்டமைப்பில் ஒடுக்கும் அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கை  ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று  அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.