tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

அமெரிக்காவிலிருந்து மங்களூரு வந்த  எல்பிஜி கப்பல்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும்  போர் பதற்றங்களுக்கு மத்தி யில், இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில்,  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தி லிருந்து சமையல் எரிவாயுவை ஏற்றிக்  கொண்டு வந்த சரக்குக் கப்பல் ஞாயி றன்று கர்நாடக மாநிலம் மங்களூரு துறை முகத்தை வந்தடைந்தது. சிங்கப்பூர் நாட்டின் கொடியுடன் இயங்கும் ‘பிக்சிஸ் பயனியர்’ என்ற  இந்தச் சரக்குக் கப்பல், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ‘போர்ட் ஆப் நெதர்  லாந்து’ என்ற இடத்திலிருந்து புறப்பட்டு  மங்களூரு வந்துள்ளது. இதனிடையே, மார்ச் 14 முதல் மார்ச் 31 வரை மங்களூரு துறைமுகத்திற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவற்றுக்கான சரக்குக் கையாளும் கட்டணங்களை முழுமையாகத் தள்ளு படி செய்வதாக ஒன்றிய கப்பல் போக்கு வரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

2,500 விமான சேவைகள் ரத்து

மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும்  அமெரிக்கா, இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் காரணமாக, ஏர்  இந்தியா நிறுவனம் கடந்த 3 வாரங்களில்  மட்டும் சுமார் 2,500 விமானச் சேவை களை ரத்து செய்துள்ளதாக அறிவித் துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”மேற்கு ஆசிய நாடுகளுக்கான தனது வழக்கமான விமானச் சேவைகளில் தற்போது வெறும் 30 சதவீதத்தை மட்டுமே ஏர்  இந்தியா இயக்கி வருகிறது. வான்வழிப்  பாதைகள் மூடப்பட்டதும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களுமே இதற்கு முக்கி யக் காரணமாகும். போர் சூழலால் விமான எரிபொருள் விலை இரண்டு  மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்  ளது. லண்டன், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா செல்லும் விமானங்கள் ஈரானைத் தவிர்த்து மாற்றுப் பாதை களில் செல்வதால், பயண நேரம் 4 முதல்  5 மணி நேரம் வரை அதிகரித்துள்ளது. உதாரணமாக, தில்லி - லண்டன் பய ணம் இப்போது 12 மணி நேரத்திற்கும்  மேலாகிறது (முன்பு 10 மணிநேரத்திற் கும் குறைவு)” என அதில் கூறப்பட்டுள் ளது.