states

மேற்கு ஆசியப் போர் தீவிர மூலப்பொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் இந்திய நிறுவனங்கள்

மேற்கு ஆசியப் போர் தீவிர மூலப்பொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் இந்திய நிறுவனங்கள்

மேற்கு ஆசியப் போர் காரண மாக, இந்திய நிறுவனங்கள்  சரக்குக் கப்பல் போக்கு வரத்து தாமதம் முதல் முக்கியமான மூலப்பொருள் தட்டுப்பாடு வரை பல் வேறு இடையூறுகளைச் சந்தித்து வருவ தாக இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஞாயிறன்று இந்தி யத் தொழிலகக் கூட்டமைப்பின் இயக்கு நர் சந்திரஜித் பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மேற்கு ஆசியப் போர்  காரணமாக முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்  மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கி லியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் இந்  திய நிறுவனங்கள் நேரடி விளைவுகளை  எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன.  சரக்குக் கப்பல்கள் வந்து சேருவதில் ஏற்பட்டுள்ள தாமதம், எரிசக்தித் தேவை களைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சரியான நேரத்திற்கு எல்லை தாண்டிய வர்த்தகத்தைச் சார்ந்துள்ள பல துறைகளில் அத்தியாவசிய மூலப்  பொருட்கள், இடைநிலை உற்பத்திப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இதன் பாதிப்பு கடுமை யாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது” என அவர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.