நள்ளிரவு ‘தரிசனம்’ செய்த சரத்குமாரின் கதி இதுதானா?
அந்த நள்ளிரவு மேஜிக் என்னாச்சு? கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்த லுக்கு முன்பாக, திடீரென ஒரு நள்ளிரவில் தோன்றிய எண்ணத்தால் பாஜகவில் இணைந்ததாக சரத்குமார் கூறியிருந் தார். “பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவேன்” என்று வீரவசனம் பேசிவிட்டு, தனது மனைவி யைத் தேர்தல் களத்தில் இறக்கிப் பார்த்தார். ஆனால், அங்கேயும் ‘வாஷ் அவுட்’ ஆகி, இப்போது இரண்டு ஆண்டுகளாகியும் தில்லியி லிருந்து எந்த ‘பதவிப் பார்வையும்’ அவர் பக்கம் திரும்பவில்லை. காத்திருந்து காய்ந்து போன ‘சுப்ரீம் ஸ்டார்’ மாநிலங்களவை (Rajya Sabha) சீட் அல்லது கட்சிக்குள் முக்கியப் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ‘வெயிட்டிங் லிஸ்டில்’ இருந்த சரத்குமாருக்கு, இந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. “கட்சியைக் கலைத்த பாவத்திற்கு, கறிவேப்பிலை யாகக் கூட மதிக்கவில்லையே” என்பதுதான் அவரது ஆதரவாளர்களின் தற்போதைய குமுறல். தன்னைப் புறக்கணிக்கும் பாஜக தலைமையால் அப்செட்டான சரத்குமார், ஞாயிற்றுக் கிழமை தியாகராய நகரில் தனது ஆதர வாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர், தனது பொறுமைக்கும் எல்லை உண்டு என்றும், யாருக்கும் தான் பயப்படுவதில்லை என்றும் கூறி யுள்ளார். கட்சியின் முன்னோடிகள் பாஜக மாநிலத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றும், அது நிறை வேற்றப்படாவிட்டால் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “நள்ளிரவில் எடுத்த முடிவு இப்போது நடுத்தெருவில் வந்து நிற்கிறது” என்று எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர்.
