articles

img

வெளியே தேர்தல்... உள்ளே மல்யுத்தம்! வேட்பாளர் தேர்வால் தெறிக்கும் மேற்கு வங்க அரசியல்!

வெளியே தேர்தல்... உள்ளே மல்யுத்தம்! வேட்பாளர் தேர்வால் தெறிக்கும் மேற்கு வங்க அரசியல்!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், எதிரிக் கட்சியுடன் மோதுவதை விடச் சொந்தக் கட்சித் தொண்டர்களுடனேயே மோதி “எனர்ஜி”யை வீணாக்குவதில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவில் ‘பார்த்தா’ பீதி பெலேகாட்டா தொகுதியில் பார்த்தா சவுத்ரி என்பவரை வேட்பாளராக அறிவித்த தற்கு, அந்தப் பகுதி பாஜக தொண்டர்கள் கொதித்தெழுந்து சால்ட் லேக் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். “பார்த்தா சவுத்ரி வந்தால் திரிணாமுல் தான் ஜெயிக்கும்” என்று சொந்தக் கட்சியினரே முழக்கமிடுவது வேடிக்கையாக உள்ளது. இதேபோல் பாலகர் தொகுதியில் திரிணாமுல்லில் இருந்து  சமீபத்தில் தாவிய சுமணா சர்க்கார் என்பவ ருக்கு பாஜக சீட் கொடுத்ததைக் கண்டித்து, பாஜக தொண்டர்கள் நாற்காலிகளைத் தூக்கிப் போட்டு ரகளை செய்தது கட்சியின் “கட்டுக்கோப்பை” அம்பலப்படுத்தியுள்ளது. திரிணாமுல் களேபரம் மறுபுறம், ஆளும் திரிணாமுல் காங்கிரஸிலும் உட்கட்சி பூசல் வீதிக்கு வந்துவிட்டது. கண்டோகோஷ் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ நபின் சந்திர பாக்கிற்கு மீண்டும் சீட் கொடுத்ததை, அந்தப் பகுதி பிளாக் தலைவர் அபார்த்திபா இஸ்லாமால் ஜீரணிக்க முடியவில்லை. “அவருக்குக் கொடுத்தால் நான் வேலை செய்ய மாட்டேன்” என்று அவர் போர்க்கொடி தூக்கியிருப்பது மம்தா பானர்ஜிக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில், மேற்கு வங்கத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, இரண்டு கட்சிகளுமே எதிரியைத் தேடிப் போக வேண்டிய அவசியமே இல்லை; சொந்தத் தொண்டர்களே வேட்பாளர்களை “கவனித்துக் கொள்கின்றனர்”.